பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தாவரம்-வாழ்வும் வரலாறும் டீரோசீரா (drosera), டையோனியா (dionaea), யூட்ரிகு லேரியா (utricularia) முதலிய தாவரங்கள் பூச்சி பிடிக்கும் பொழுது சிறு மயக்கம் காணப்படுகின்றது. டிரோசீரா உலகின் பலவிடத்தும் காணப்படுகின்றது. இவை பொதுவாக மண்ணில் சத்துப் பொருள்கள் அருகியுள்ள சதுப்பான இடத்தில் வளரும். இதன் தண்டு மிகவும் சிறியது; இலைகள் தண்டைச் சுற்றிக் கொத்தாகத் தோன்றும். காம்பு, இனத்திற் கேற்ப நீண்டும் குட்டையாகவும் இருக்கும். இலே அடி குறுகி நீண்டும் வரவர நீள்வட்டமாயுமுள்ளது இலேப்பரப்பிலும். இலே விளிம்பிலும் சுரப்பி மயிர் அடர்ந்து இருக்கும். மயிர் நுனியிலுள்ள சுரப்பி நச்சு நீர் பொழியும். சாதாரணமாக இலேகள் செந்நிறமாக இருப்பதால் செடியே ஒரு பூவைப்போலத் தோன்றும் . நிறத்தால் இழுக்கப்படும் சிறு பூச்சிகள் இலையில் உட்கார்ந்தவுடன் சுரப்பி மயிர் உணர்வு இயக்கப் பண்பில்ை பூச்சிகளைச் சூழ்ந்து மூடிக் கொண்டு நச்சு நீரைப் பொழியும். பூச்சிகள் அசைவற்று மயங்கி, நச்சு நீரால் கரைக்கப்பட்டுச் செடிக்கு உணவாகிவிடும். உணவுப் பொருள் உட்செல்வதைச் சுரப்பி மயிர் அமைப்பில் காண்க (படம் 35).