பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு ஒரு செடியில் உள்ள இலே, வேர், தண்டு, கிளைகள் பதிய (vegetative) உறுப்புகள் எனவும், பூ, காய், கனி ஆகியவை பிறப்பிக்கும் (reproductive)' உறுப்புகள் எனவும் கூறப்படும். மு8ளக்கும் விதையில் உள்ள முளேக் குருத்து இலைகளேப் பெற்று நேராக ஓங்கி வளர்ந்து தண்டாகும். இளமையில் இது பசுமை யாக இருக்கும். தண்டின் நுனியில் நுனிக் குருத்து இருக்கும். அதைப் பல் இள இலைகள் சுற்றிச் குழ்ந்திருக்கும். பொதுவாகத் தண்டு உருளை வடிவமுடையது. தும்பை (eucas aspera), துளசி (ocimum sanctum) முதலிய செடிகளில் தண்டு நாற்கோண மானது. சப்பாத்தியில் தண்டு இலையைப் போல் பட்டையாகவும், amoiroiflu?fi, (euphorbia antiquorum) *rg. l5gjfi£ *®35úufìguéiror காகவும் இருக்கின்றது. 0 pf 4%g,56*jrG (Erect stem) தத்தம் தொழிலுக் கேற்பத் தண்டுகள் வளர்கின்றன. நேராகவும் உருளை வடிவாகவும் கிளேக்காமல் தடித்து வளர்வன ப&ன, தென்ன, பாக்கு, ஈச்சம் முதலியன. இவைகளில் இலேகள் (கூட்டிலைகள்) விழுந்த பின்பு தண்டில் ஒரு நீண்ட வடு இருக்கும். இத்தண்டுகள் காடெக்ஸ் (caudex) எனப்படும். கணுக்கள் தவிர மற்ற இடங்களில் உட்கூடுள்ள கூட்டுத் தண்டு மூங்கில் மரத்தில் ய லண்டு. இது புல்தண்டு (culm) எனப்படும். சில ஒரு விதை யிலத் தாவரங்களில் இலைகள் கொத்தாகவும் வேரிலிருந்து நேரடி யாக வெளியில் வளர்வன போன்றும் இருக்கும். இவற்றிற்குத் தண்டுகள் வெளியில் இல்லே. மண்ணுக்கடியிலேயே இவற்றின் ம.ண்மையான தண்டுகள் உள்ளன. பூக்கும்போது இந்நிலத் கண்டிலிருந்து தனிப் பூவோ அல்லது பூங்கொத்தோ நீண்ட கம்பி போன்ற தண்டுக் கிளேயில் வெளிப்படும். அதற்கு நேர் பூக்காம்பு (cape) என்று பெயர்.