பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டு 83 அதற்கு அருகில் எவ்விதமான மரம், செடி, கொடி முதலியவை களோ, கொழுகொம்போ இல்லே. கொடி, கொழுகொம்பின்றித் தவித்துத் தவழ்ந்தது. அதற்கு எதிர்ப்புறத்தில் அவர் ஒரு குச்சியை நட்டார். அக் குச்சியை நோக்கி, அந்தக் கொடி வளர ஆரம் பித்தது. குச்சியைப் பிடுங்கி, மறுபடியும் வேறிடத்தில் சற்று எட்டி நட்டார் அவ்வறிஞர். அப்பொழுதும், அக் கொடி அக் குச்சியை நோக்கி வேகமாக வளர ஆரம்பித்தது. திரும்பவும் அவர் குச்சியினே எதிர்ப்புறமாக நட்டு வைத்தார். கொடியும் சளேக்காமல் எதிர்ப் புறம் திரும்பி, அக் குச்சியை நோக்கி வளர ஆரம்பித்தது. திரும்பத் திரும்ப அக் குச்சியைத் தள்ளியோ, அன்றி எதிர்ப்புறமாக நடுகின்றபொழுதெல்லாம் அதனே நோக்கி வளர்ந்து வந்த அச் செடி தன்னியல்புக்கு ஒர் எல்லே வைத்துவிட்டது. அதன் பிறகு அவர் அக் குச்சியை அக் கொடிக்கு மிக அண்மையில் நட்டு வைத்துப் பார்த்தார். ஆல்ை, அக் கொடி அக் குச்சியைப் பின்னர் நாடவேயில்லே. மற்றுமொரு வியத்தகு இயல்பு சுற்றுக் கொடிகளுக்குண்டு. பூமியின் நடுக்கோட்டிற்குத் தென்புறம் உள்ள சுற்றுக் கொடிகள் வலமிருந்து இடமாகவும் (sinistrose), பூமியின் நடுக்கோட்டிற்கு வ.புறம் உள்ள சுற்றுக் கொடிகளில் ஒன்றிரண்டு தவிர மற்றவை யெல்லாம் இடமிருந்து வலமாகவும் (dextrorse) சுற்றி வளர் கின்றன. இவ்வியல்பை மாற்ற முடியவில்லே. அன்றியும் வலப் புறமாகச் சுற்றி வளரும் கொடியின் விதைகளேத் தென்னடுகளில் முளேக்க வைத்து வளர்த்தால், அவை இடப்புறமாகச் சுற்றி வளர் கின்றன. சுற்றுக்கொடிகள் நன்ருகப் பருத்து மிகுந்த வலிமையை அடைவதும் உண்டு. பெரும்பாலும் இவ்வகைக் கொடிகள் அடர்ந்த காடுகளில் காணப்படும். சூரிய வெளிச்சம் நாடி மிக உயரமான மரங்களின் மீதேறிப் படர்வன மாதவி (hiptage madablot), சார்ஜானியா (sergania) முதலியவைகளாம். இவைகளின் தண்டுகள் சிறப்பான அமைப்புள்ளவை (படம் 88). கொடிமுந்திரியின் நுனிக்குருத்து, ஒர் இலையைத் தோற்று வித்த கணுவிலிருந்தே பற்றுக்கம்பியாக மாறிவிடும். அதனுல் கொடி தொடர்ந்து வளர இயலாது போகும். அதற்காக அக் கணுவிலுள்ள கணுக்குருத்துத் தளிர்விட்டு நுனிக்குருத்தின் தொழிலே மேற்கொண்டு, கொடியின் தண்டாகி நீண்டு வளரும், இவ்வாறு வளரும் அந்தக் கணுக்குருத்து அடுத்த கணுவைத் தோற்றுவித்து, எதிர்ப்புறமாக ஓர் இலே விடும். இலேயை உண்