பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 101


122 மாறுவது மாறட்டும்

ஆற்றின் மாற்றத்தில் ஏதோ ஒன்று மாறுவதில்லை. தண்ணீர் ஓடுகிறது. ஆனால், மாற்றமில்லாத ஒன்று தானே உருவாகவும் செல்லவும் எப்போதும் உள்ளது

எல்லாம் மாறுகின்றன என்பதையும், மாற்றம்தான் எல்லாமே என்பதையும் அறிந்து கொள் எல்லா மாறுதல்களிலும் மாறாததை நம்பு

மாறுதலாக இருக்க மாறிவிடு மாறாமல் இருக்க, மாறுவது மாறட்டும்

123. உரிய காலத்தில்

உரிய காலத்தில் மழை ஒடையாகவும், ஓடை ஆறாகவும், ஆறு கடலாகவும் மாறுகின்றன

நாமெல்லாருமே நாமாகவே கீழ்நோக்கி ஓடுகிறோம் நாம் மழையாக, ஓடையாக, ஆறாக, கடலாக இருந்தால் அதனால் என்ன?

ஆனால் ஆற்றிலிருந்து ஓடையையும், கடலிலிருந்து மழையையும் கூடப் பிரி பின் தொல்லை தொடர்கின்றது.