பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


170. மூச்சுவிடும் இயற்கை போல

இணைந்திருக்கும் காதலர்கள் அலைகள் போல, பருவ காலங்கள் போல, தலைமுறையினர் போல ஒரே ஒத்திசைவில் நகருகின்றனர். அவர்கள் நிரப்பியும், வெறுமையாக்கியும் மூச்சு விடும் ‘இயற்கை’ போல உள்ளனர்.

நிரப்புவது வெறுமையாகிறது. வெறுமையாவது நிரம்புகிறது ஒவ்வொன்றும் அடுத்தது என்ன என்பதை உணர ஒன்றை ஒன்று தொடர்கின்றது.

எல்லாமே அசைகின்றன. எல்லாமே மாறுகின்றன, மாறும் இயற்கையைத் தவிர.

171. அவ் வகைக் கடலில்

ஆண் கூறுகிறான் : “எனக்குப் பெண்ணைக் கொடு, அவளை என் உடலுடன் எடுத்து நிரப்புகிறேன்”.

பெண் சொல்கிறாள் “எனக்கு ஆணைக் கொடு. அவனை என்னுடன் இணைத்து அணைத்துக் கொள்கிறேன்”

முழுமையான ஆண் உலகையே நிரப்புகிறான். வெற்றிடமான பெண் உலகையே சூழ்ந்து கொள்கிறாள்

அவ் வகையான கூடலில் என்ன வெல்லாம் நடக்க வேண்டும்!