பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


ஒவ்வொன்றும் விடுதலை பெறுவதில் காலம் உள்ளது நாம் ‘இயற்கை நெறி’ வினால் முன்னேறுகிறோம்

காலம் தீர்மானது (உறுதியானது) வெகு விரைவில் அலலது காலம் தாழ்த்த இவற்றைத் தவிர்க்கக் கவனமாகவும் கருத்தில்லாமலும் இரு இவ் உலகம் முழுதும் ஒவ்வொரு கணத்தினைப் பற்றி நிற்கிறது இருந்தும் எதுவும் ஒரு பொருட்டாவதில்லை ஒவ்வொரு கணமும் பிறப்பையும் இறப்பையும் போலவே முயற்சி இல்லாதது

29. ஒரு வகையால் கண்டுபிடித்தல்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வெறுமைதான் இருவரையும் இழுக்கிறது அதைத் தேடு, இழககப்படும் அதைத் துரத்திச் செல், அது அடைய முடியாதது

வெறுமையைக் காண, முதலில் வெறுமையாகு விரும்பாமல், தேவைப்படாமல் நாம் ஒரு வகையில் கண்டு பிடிக்கப்படுகிறோம்

30. நீரைப் போலக் கூடுதல்

விட்டுக் கொடுப்பது வலிமைக்கப்பால், வலிமை விட்டுக் கொடுப்பதற்கப்பால் வினாக்களுக்கு அப்பாற்பட்டது விடைகள், விடைகளுக்கு அப்பாற்பட்டது