பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 57


இருள்தான் ஒளியின் தொடக்கம் இதில்தான் முதன்மை தொடங்கி, அதிலேயே முடியும் திரும்புகிறது

ஒளியை, வெளிச்சத்தை மட்டும் விரும்புவர்கள் தொடக்கம், முடிவு வருவது, போவது மற்றும் எல்லாவற்றிலும் உள்ள ஏற்ற இறக்கங்களை அறியமாட்டார்

ஆண் பெண்ணிடம் வரும்போது அவன் ஒரு தனித்த இருளுக்கு வருகிறான்

71. வழக்கமான நலம்

மிகப்பெரிய மலைகள், நிலம் முழுவதையும் மூடுவதில்லை அருவிகள் எல்லாம் ஆறுகள் அல்ல பொதுநிலை கடந்தவையில் பல பொதுநிலையே.

ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் ஒத்திசைவில் வளர்கின்றனர் நாளும் கூட்டிசை, ஏந்தான அமைதி, வளரும் நிறைவேறப்பட்ட ஆசைகள் ஆகியவை

வழக்கமான நலம், ஒன்றாயிருத்தல் ஆகியவற்றிலிருந்து எளிமையாகப் பங்கு கொள்ளப் பொது இடத்திலிருந்து அமைதியாக வருகிறது