பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 變 தாவோவின் ஆண்பெண் அன்புறவு

மீண்டும் பார்ப்பது என்பதிலிருந்து காண்பதும், மீண்டும் கேட்பதிலிருந்து கவனிப்பதும் ஆயிற்று. காண்பதும், கவனிப்பதும் முழுமையாகவும் எளிதாகவும் ஆகும் வரை பார், கவனி

பிறகு பார்ப்பதைக் காண், கேட்பதைக் கவனி கண், காது இவற்றிலிருந்து எண்ணத்தை வெளியேற்று காணாமல் பார், கேளாது கவனி பின்னர் அங்கே பார்ப்பதும், கவனிப்பதும் உள்ளது

பிரியாமல், பிரிந்து செல், அப்போது அங்கே இணைந்திருக்கலாம்

80. மிக்க நெருக்கம்

நினைத்துக் கொள்ளும் போது போய்விடும், மறக்கும் போது அங்கே இருக்கும் இயற்கை நேர் அறிவை வழி தவறிச் செல்ல வைக்கும்

தாங்கள் ஒன்றாக இருப்பதை உணராத ஆணும் பெண்ணும் பெரும்பாலும் ஒன்று சேர்ந்திருப்பர் எது போல என்றால் - காலில் அணிந்துள்ள செருப்பு செருப்பே இல்லாது போல தோன்றும் போது நடப்பதை எளிதாக்குகிறது. மேல் சட்டை அணிந்திருந்தும், அது இல்லாது போல உணரும் போது குளிரைத் தடுக்கிறது இதுபோல ஆணும் பெண்ணும் தாங்கள் அறியாமலேயே உணராமலேயே ஒன்றாயிருக்கின்றனர்.