பக்கம்:தித்தன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 13 — எனவும் வருமிடங்களிற் கண்டுகொள்க. அவர் காட்டிய அகப்பாட்டுப் பகுதிக்குக் கொற்கைத் துறையுடையவனகிய செழியனுடைய தலைநகராகிய கூடற்பகுதியினிடிய பெருங் கம்பலைபோல நீ பரத்தை யோடாடியது பலர்வாய்ப்பட்டு அலராகின்றது என் பதுதான் பொருளாம். கொற்கைக் கோமான் செழியன் தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின் மதுரை' என்பது (சிறுபாண்) கொண்டு உண்மை யுணர்க. கடற்பட்டினமுங் தலைநகருஞ் செழியனுடைமை குறித்தாரென வறிக. கூடம் கம்பலைபோல் அலர் நீள நிறையப் பரந்தது என்பது கருத்தாகக் கொள்க. இப்பகுதி கொற்கைத் துறைவகிைய செழியன் கூடம் பதிக்குப் படையெடுத்து நீள வந்ததலைாகிய கம்பலே போல அலராகின்றது என்று நினைத்தற்கு மிடங் தராமை மூலத்தை நோக்கியறிக. கூடனிடிய கம்பலே போல அவ்வளவு பெரிதாகின்ற தெங்ங்னமெனிற் பலர் வாய்ப்பட்டுப் பெரிதாகின்ற தென்றதாகக் கொள்க. கபிலர்க்கு ஒத்த காலத்தவரென்று கருதப் படும் பரணர் செழியன் கூடல்' (அகம் 116) என்ற தனையே கபிலர் அகுதைகூடல் (புறம்) எ ன ப் பாடுதலானும் அகுதையுள்ள கூடல் செழியன காதல் கன்கு தெளியப்படு மென் க. இவர்க்கொரு காலத் தவரான குடவாயிற் கீரத்தனரும், 'வழுதிகூடல்' (அகம் 815) எனக் கூறுதல் காண்க இனித் தித்தனுறங்தை யென வருதல் பற்றித் தித்தனே உறையூர்ச் சோழர் குடியினனென் முற் போல 'அகுதை கூடல்' (புறம் 347) என வருதல் கண்டு அகுதையைப் பாண்டியன் என்று துணிந்தாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/17&oldid=894328" இலிருந்து மீள்விக்கப்பட்டது