பக்கம்:திரட்டுப் பால்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் திருக்கோலம் 3. ஓங்காரத் துள்ளொளிக்குள் அவன் திருவுருவத்தைக் கண்டவர்கள் தூங்காமல் தூங்கும் சமாதி நிலையைப் பெறு வார்கள். - அவனுடைய திருக்கரத்திலுள்ள வேல் ஞானமே வடி வானது. வேதங்களாலும் ஆகமங்களாலும் அறியும் ஞானமே வேலாக இருக்கிறது. அதனல், வேதாகம சித்ர வேல்?? என்கிறர். அது மிகவும் கூர்மையானது. அயில் வேல், இகல் வேல், படைபட்ட வேல், வையிற் கதிர் வேல், கிரெளஞ்சகிரி ஊடுருவத் துளேத்த வேல், அது. அன்பர் களுக்கு மெய்த்துணையாக இருக்கிறது. அதை முருகன் விட்டதல்ை கடல் வெந்தது; சூரகிைய மாமரம் தறிபட்டு உதிரம் குமுகுமெனக் கக்கியது; கிரி ஊடுருவி வந்தது. அது குன்றம் எட்டும் கிழித்தோடும் வேல்; சூரனேயும் கிரெளஞ்ச மலேயையும் ஒரே சமயத்தில் துண்த்தது. அது புறப்பட்ட பொழுதே அசுரர்கள் அஞ்சிக் குழம்பிப் புலம்பி ஆரவாரித் தனர். சக்தி என்பது வேலுக்கு ஒரு பெயர். கதிர் வேல், சிகராத்ரி கூறிட்ட வேல், புரையற்ற வேல், வேலையையும் குரனேயும் மேருவையும்' குலத்த வேல், செவ்வேல், வடி வேல், செஞ்சுடர் வேல், கூர் கொண்டவேல், செய்யவேல், தனிவேல், விக்ரம வேலாயுதம், போர் வேல் என்றெல்லாம் வேலாயுதத்தைப் பாராட்டுகிரு.ர். திருநாமங்கண்ப் பல வகை அடைமொழி دة سيالاتجالاقتي له بقي களுடின் சொல்லிச் சொல்லி இன்புறுகிறர். - * :--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/11&oldid=894369" இலிருந்து மீள்விக்கப்பட்டது