பக்கம்:திரட்டுப் பால்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தலங்கள் முருகன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் சிலவற்றைச் சொல்கிறர். திருவண்ணுமலையில் பல காலம் வாழ்ந்த வராதலின் முதற் பாட்டிலேயே, அடலருணேத் திருக் கோபுரத்தே அந்த வாயிலுக்கு, வடவருகிற் சென்று கண்டு கொண்டேன் வருவார் தலையில், தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக், கடதட கும்பக் கணிற்றுக் கிளேய களிற்றினேயே?’ என்கிருர், திருச்செங்கோட்டில் பேரன்பு கொண்டவர் அருணகிரிநாதர். வேறு எந்தத் தலத்தையும் சொல்லாத கந்தர்அனுபூதியில், நாகாசல வேலவ’ என்று. அந்தத் தலத்தை மட்டும் சொல்கிருர். - கந்தர் அலங்காரத்தில், தெய்வத்திருமலைச் செங்கோடு, காவிரிச் செங்கோடு, செங்கோட்டு வெற்பு, சேலார் வயற். பொழிற் செங்கோடு, கன்னிப் பூகமுடன் தருமா மருவு செங்கோடு, சேலிற்றிகழ்வயற் செங்கோடை வெற்பு என்று சிறப்பிக்கிறர். திருச்செந்தூரை, சேல்ட் டழிந்தது. செந்தூர் வயற். பொழில்’ என்பதில் சொல்வதோடு, ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில்?’ என்றும் சொல்கிரு.ர். கடல் அலையின் துளிகள் யாவும் அவருக்கு முத்துக்களாகத் தோன்றின போலும்! படிக்கின்றிலே பழநித் திருநாமம்’ என்று பழநியையும், தென்தணிகை”, 'திருத்தணிக் குன்று’ என்று திருத்தணியையும் இயம்புகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/19&oldid=894377" இலிருந்து மீள்விக்கப்பட்டது