பக்கம்:திரட்டுப் பால்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திரட்டுப்பால் நடுங்கிப் போனன் கிரவுஞ்ச கிரி தவிடுபொடியாகிவிட்டது. அது ஆறு கூருகப் பிளந்தது; அது கிழிந்ததுபோல விரைவில் அழிந்தது. அவன் வேலாயுதம் விட்டதல்ை மலேகள் அற்றன; அவுனர் சிரங்கள் அற்றன; கடல் வறந்தது. இந்திராணியின் மங்கல நா8ணக் காத்தான். கிருத்திகை மாதர் பாலே உண்பற்காக விம்மி விம்மி அழுதான். அம் மாதர் பாலே உண்டு அது போதாமல் புவனங்கள் ஈன்ற பொற்பாவையாகிய அம்பிகையின் பால உண்டான். அவன் சப்பாணி கொட்டினன்; திசையில் உள்ள எட்டு மக்களும் பாதி பாதியாய் விழுந்தனவாம்; மேருவும் குலுங்கியதாம். விண்ணுேர் உய்ந்தனர். அவனுடைய பாதம் பட்டதல்ை அருணகிரிநாதப் பெருமான் தலைமேல் அயன் எழுதிய எழுத்து அழிந்து விட்டதாம். பாதித் திருவுருப்பச் சென்றிருக்கும் சிவபிரானுக்கு உப தேசம் செய்தான். இதை, தந்தைக்கு முன்னம் தனிஞான வாள் ஒன்று சாதித்தருள் கந்தச்சுவாமி’ என்பதில் குறிப்பிடுகிருர், முருகன் செந்தமிழ் நூல் விரித்தவன். தேவர்களைச் சிறையினின்றும் மீட்பதற்காகத் தன் சிற்றடியில் பூங்கழல் கட்டிக் கொண்டான். அவன். விளையாடியபோது திண்கிரிகள் சிந்தின. அன்பர்களுக்குக் குருவடிவாய் வந்து உபதேசம் செய்வான். எங்கே நினப்பினும் அங்கே என் முன்வந்தெதிர் நிற்பனே' என்று அருணகிரியார் அவன் அருளைப் பாராட்டுகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/22&oldid=894380" இலிருந்து மீள்விக்கப்பட்டது