பக்கம்:திரட்டுப் பால்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை இழித்துக் கொள்ளல் இறைவனிடம் இடைவிடாத பக்தி 蛇.Gö》注一疑路 வராயினும் அருணகிரிநாதர் தம்மை உயர்வாக எண்ணுமல் இழிவாகவே எண்ணிப் பேசுகிருர். இந்த நைச்சியானு: சந்தானம் ஞானிகளுக்கு இயல்பு. நான் சென்ற பிறவிகளிற் செய்த பேறு இல்லாதவன்; இந்தப் பிறவியில் தவம் செய்யாதவன்’ என்கிருர். ஐந்து இந்திரியங்கள் அவரை நல்லதை நிக்னக்கச் செய்யாமலும், அதில் நிலைநிற்கச் செய்யாமலும், மலரிட்டு முருகனத் தொழவொட்டாமலும் செய்கின்றன. உள்ளத்தில் பிரமம் கொண்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கிருராம். உலகத்தில் உள்ள பாச வாழ்க்கையில் பஞ்சேந்திரியங்களால் குழப்பம் அடைந்திருக்கிருள். பாசநெஞ்சராக உள்ளார். மங்கையரைப் புகழ்ந்து திரிகிரு.ர். மங்கையர் தம் கண்ணுல் அவரைப் பதைக்கப் பதைக்க வளேக்கிருர்கள். இருங்காம விடாயில் பட்டு ஆருயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல் விழியார் மயலில் மனம் கட்டுண்டது. பக்தித்துறை இழிந்து ஆனந்த வாரி படிவதென்ருே?’ என்று கேட்கிரு.ர். அப்போது புத்தித்தரங்கம் தெளியுமாம். துன்பம் இன்பம் கழித்து ஒடுகின்ற காலம் எக்காலம்? என்று ஏங்குகிறர். *உதித்தாங் குழல்வதும் சாவதும் தீர்த்தெனை உன்னில் ஒன்ருய் விதித்தாண்டு அருள்தரும் காலம் உண்டோ? என்று ஆராமையுடன் வினவுகிருர், பால்போன்ற மொழியுடைய தி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/25&oldid=894383" இலிருந்து மீள்விக்கப்பட்டது