பக்கம்:திரட்டுப் பால்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22* திர்ட்டுப்பால் விரிஞ்சன், பங்கேருகன், நான்முகன், அயன் என்பன அவர் பிரமனேக் குறித்துக் கூறும் திருநாமங்கள். - உடலின் இழிவு இந்த உடம்பின் இழிவைப் புலப்படுத்தும் வகை பல. இதில் உள்ள பஞ்சேந்திரியங்களும் நம்மை அலேக் கழிக்கின்றன. அந்த ஐவர்களால் இந்த உலக வாழ்க்கையில் குழப்பம் உண்டாகிறது. இந்த உடம்பு வெய்யிற் கொதுங்க உதவாஉடம்பு; இதன் நிழல் வெறும் நிழல்; ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு கைவைத்த, வீடு; பொக்கக் குடில், நிணம் காட்டும் கொட்டில்; என் கரங்கள் உன் முன் குவியாக் கரங்கள்; தோலால் சுவர் வைத்துப் பத்து வகையான வாயுவை வைத்து இருகாலால் எழுப்பி, வளே முதுகு ஒட்டி, கைநாற்றி நரம்பால் ஆக்கை யிட்டுத் தசை கொண்டு வேய்ந்த அகிம்; பூதவீடு; சாகையும் பிற்க்கையும் உடையது; வினையில்ை விளைவது; இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணுத மாய உடம்பு; இதல்ை உண்டாவது கிலேசம், இந்த ய்ாக்கை நீர்க் குமிழிக்கு நிகரானது; ஐவர் பராக்கில்ை கெடுவது; பதைக்கும் மனம் உடையது; முருகன் தாளேச் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் எனக்குப் பிரமன்படைத்தான் என்கிருர், ஐவரும் கைவிட்டு மெய்விடும் போது முருகன்தான் அடைக்கலம். நரம்பாற் பொதிந்த பொதி இவ்வுடம்பு; துட்ட நோய் அடைவது; ஆவிக்கு மோசம் வரும். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/30&oldid=894389" இலிருந்து மீள்விக்கப்பட்டது