பக்கம்:திரட்டுப் பால்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபதேசம் 思pácm உய்ந்து நற்கதி அடைவதற்குரிய உபதேசங்களேச் செய்கிருர், அயில் வேலன் கவியை எழுச்துப் பிழையறக் கற்க வேண்டும்; மனத்தைத் தடுக்க வேண்டும்; வெகுளியை விடவேண்டும்; தானம் என்றும் இடுக; இருந்தபடி இருக்க வேண்டும்; அப்போது அருள் தானே வெளிப்படும். வடிவேலோனே வாழ்த்தி வறிஞர்க்கு என்றும், நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்; கோழிக் கொடியன் அடி பணியாமல் உங்கள் பொருளைப் புதைத்து வைத்தால் இந்தப் பிறவியின் பின் வருமா? முருகன் திருநாமம் புகல்பவர் பிறவிக்கடலில் புகார்; மிடியால் விதனப்படார். தொண்டர் குழாம் சாரில் கதி அன்றி வேறு இல்லே. முருகனை வணங்கி, ஏற்றவர்க்கு இலேயாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து இடுங்கள்; அதுவே ஒருவகைத் தவம், அது நிலையானது. குமரனே எண்ணிக் கசிந்துருகி உள்ளபோதே கொடாதவர் பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்தின்ாத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளே வீனுக்கு மாய்ப்பவரே. ஆங்காரமும் அடங்கவேண்டும்; பரமானந்தத்தே தேங்குக; நினைப்பும் மறப்புமாகிய சகல கேவலங்கள் அறவேண்டும்; இல்லையேல் எமதுாதருக்கு அஞ்சும்படி நேரும். முருகன் கவி கேட்டு உருகி இழியும் கவி சுற்றிடாதிருப்பீர் சண்முகவா எனச் சாற்றி நித்தம, இருபிடி சோறு கொண்டிட்டுண்ருடிம்; ஏற்பவர்க் கிட்டது முருகன் அருள் போல் எங்காயினும் வரும்; முருகன் சாணத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/31&oldid=894390" இலிருந்து மீள்விக்கப்பட்டது