பக்கம்:திரட்டுப் பால்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கந்தர் அலங்காரம் அமரா வதியிற் பெருமாள் திருமுகம் ஆறும்கண்ட தமர்ஆகி வைகும் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமராசன் விட்ட கடையேடு வந்தினி என்செயுமே? (87), வணங்கித் துதிக்க அறியா மனித ருடன் இணங்கிக் குணங்கெட்ட துட்டனே ஈடேற்று வாய்;கொடி யும்கழுகும் பிணங்கத் துணங்கை அலகைகொண் டாடப் பிசிதர்தம்வாய் நிணம்கக்க விக்ரம வேலா யுதம்தொட்ட நிர்மலனே. (88). பங்கே ருகன்எனப் பட்டோ லேயில்இடப் பண்டுதளே தன்காலில் இட்ட தறிந்தில னே? தனி வேல் எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எம்கோன் அறியின் இனிநான் முகனுக் கிருவிலங்கே, (89), மாலோன் மருகனே, மன்ருடி மைந்தனே, வானவர்க்கு மேலான தேவனே. மெய்ஞ்ஞான தெய்வத்தை, மேதினியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/66&oldid=894428" இலிருந்து மீள்விக்கப்பட்டது