பக்கம்:திரட்டுப் பால்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரட்டுப்பால் 1. முருகன் திருக்கோலம் முருகப் பெருமானுடைய திருவடி புண்டரீகத்தினும் செக்கச்சிவந்து விளங்குகிறது. அந்தத் திருவடியில் அவன் தண்டையையும், கிங்கிணியையும், சதங்கையுைம், வெட்சி மலரையும், குராமலரையும், கடம்ப மலரையும் அணிந்திருக் கிருன். அந்தத் திருவடி அருள் பர்லித்தலால் அவற்றை அருட்பதங்கள் என்று சொல்கிருர் அருணகிரிநாதர். அந்தக் கழலை இடைவிடாமல் தினேத்து அதில் மனம் சேர்ந்திருக்க வேண்டும். 'தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்’ என்ற குறளின் உரையில், சேர்தல்ாவது இடை விடாது நினைத்தல் என்று பரிமேலழகர் உரை எழுதுகிரு.ர். அவனுடைய சிற்றடியைத் தொழுது கருத்தை இருத்தி வைத்தல் வேண்டும். அவனுடைய திருவடியை வணங் கினவர் தலைமேல் அயன் எழுதிய எழுத்து அழிந்து போகும். இவ்வாழ்க்கையில் துன்பம் வராது; பிறகு பிறப்பும் வராது. அவனுடைய தண்டையம் புண்டரிகமாகிய திருவடியே. சுத்த ஞானமயமானது. அவனுடைய திருவடியே மோட்சம், 'இறைவன் திருவடி அடைந்தார்’ என்று சொல்வது அவர் முத்தியடைந்தார் என்பதையே குறிக்கும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்?’ என்று வேண்டுகிருர் அருணே முனிவர். இந்த உடம்பு போன பின்பு முருகன் அன்பர்களுக்குக் கதியாக இருப்பவை அவனுடைய இருதாளன்றி வேறு இல்லே. . . . . 弱応ーl

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/9&oldid=894445" இலிருந்து மீள்விக்கப்பட்டது