பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். = செற் +று, பகுதியீற்றுலகரமும் விகுதி தகரமும் றகரங்களாய்த் திரிந்தன்; = செ+று, பின்னின்ற றகரம் தொக்கது; = சேறு, அதன்பின்னின்ற எகரம் நீண்டது; இவ்வாறே வெல்லு வேறு ஆயிற்று. 7-வதும்பார். நில்லுது - நிற்று ஆயிற்று, உகரங்கெட்டு லகர தகரங்கள் றகரம்களாய்த் திரிந்தன. கொள்ளுது = கொள்ளுவு = கொள்ளுவ +உ, வகர இடைநிலை, உவிகுதி; = கொள் +து உகரங்கெட்டு ளகரதகரங்கள் டக = கொட்+டு ரங்களாகத் திரிந்தன ; = கோடு; இருட கரங்களில் பின்னின்றது கெட அதற் குப் பின்னின்ற ஓகரம் நீண்டது. 7- வதும்பார். காண்டு = காணுவ +உ= காணுத+உ= காணுது = காண்டு. (13) தன்மைப்பன்மைவிகுதிகள். ஆம் ...... நாம் என்னும் ஸர்வநாமத்திற்கு முதனிலையாகிய ஆம் என்னும் ஸர்வநாமம் விகுதியாய்வந்தது. உ. உண்ணாநின்றம் தாரினாம் உண்பாம் கேட்பாம் ஆடுவாம் ஆடாம்=ஆடுவாம், உகரவகரங்கள் கெட்டன. "பாம்புகயிறாகக் கடல்கடைந் தமாயவன் ஈங்குதம்மானுள் வருமேலவன்வாயில் ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழி சிலப்ப. கேளாம் = கேட்பாம் = கேளுவாம் கன்றுகுணிலாக்கனியுகுத்தமாயவன் இன்று நம்மானுள் வருமேலவன்வாயில் கொன்றையந்தீங்குழல்கேளாமோதோழி”. ஷை ஏம் ... ஆம் விகுதியின் ஆகாரம் ஏகாரமாயிற்று. உ. உண்டேம் உண்ணாநின்றேம் செய்யேம் உண்பேம் - கொடேம்