திரவிடசப்ததத்வம்.
வடதலை வரையில் உள்ள பத்து நாடுகளும் மேற்காட்டிய செய்யுளி
லும் கூறப்பட்டிருக்கின்றன. பொங்கர், ஒளி என்னு மிரண்டு
பெயர்க்குப்பதிலாய் வேணாடு புனனடு என்னு மிரண்டு பெயர்கள்
வந்திருக்கின்றன. இந்தப் பெயர்களில் வேணாடு என்பது திருவகந்த
புரத்தைச் சேர்ந்த தேசமெனத் தெரியவருகின்றது. புனனாடு
காவிரிகாடு. ஆனால் பொங்கர்நாடு, ஒளிநாடு என்பன இவையெனத்
தெரியவரவில்லை. வேறொரு அச்சுப்பிரதீகத்தில், பொங்கர் என்ப
தற்குப் பதிலாய் பொதுங்காநாடு என வந்திருக்கின்றது:
பூழிநாடென்பது மதுரைக்கருகிலுள்ள ஓாபட்டணமும் அதனைய
த்ேத நாடுமென்பர் சிலர்.
அருவா அருவாவடதலை, சென்னபட்டணவரசாட்சிக்குள்பட
வடதேசங்கள் போலும்.
தமிழொழிந்த பதினெட்டு நாடுகளாவன :-
"சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துழுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம் வங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே '" (நன்.
விரு. p. 243.)
4. வடசொல் வடமொழியிலிருந்து தமிழில்வந்து வழங்
கும் சொல்; இது இருவகைத்து தற்சமம், தற்பவம் என.
5. தற்சமம் வடமொழிக்குந் தமிழிற்கும் பொதுவாகிய
எழுத்துக்களாலமைந்து வேறுபாடில்லாது வடமொழியி
லிருந்துவந்த பதங்கள்.
(உ-ம்.) காரணம்
வாரணம்
கர்ணன்
பாபம்
வீரன்
காநநம்
உத்தரம்
பரமன் வரன்
காசம்
தமாலம்
விமாநம்
வடமொழியில் பும்லிங்கவிகுதியாகிய அஸ் என்பதை நீக்கி அத
னிடத்தில் தமிழ் ஆண்பால் விகுதியாகிய அன் என்பதை வைப்பது
வேறுபாடாகாது. மற்ற பால்காட்டும் விகுதிகள் வரும்பொழுது
இவ்வாறே கொள்க.
6. தற்பவம் வடமொழியிலிருந்து வேறுபாட்டுடன்
கஞ்சொல்.
பாசகன்
சரணம்
சலநம்
அமரன்
வசநம்
குசம்
ஆபணம்
தபநன்
பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/3
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை