திரவிடசப்ததத்வம்.
மேன-மேன், மேல் என்பதன் ஈற்று லகரம் னகரமாய்த்
திரிந்தது, அகரம் ஈற்றில் வந்தது. “பால்பிரிந்திசையா
வுயர்திணைமேன" (தொல்-சொல்-சூ-57.)
கிளவியான - கிளவியான், ஆன் என்னும் மூன்றாம் வேற்று
மையுருபின் ஈற்றில் அகரம் வந்தது. "செப்பேவழீஇயி
னும்வரைநிலையின்றே, அப்பொருள் புணர்ந்த கிளவியா
ன (தொல்-சொல்-சூ-15.)
தெரியுமோர்க்கே - தெரிந்தோர்க்கு, த என்னும் நான்காம்
வேற்றுமையுருபின் ஈற்றில் ஏகாரம் வந்தது. "திரிபிட
னிலவே தெரியுமோர்க்கே (தொல்-சொல்-சூ-101.)
ஆசிரியர்க்க - ஆசிரியர்க்கு , தவ்வுருபி னீற்றில் அகரம் வந்
தது. "கடிநிலையின்றேயாசிரியர்க்க (தொல்-சொல்-
சூ-108.)
பெயர்க்குந்து- பெயர்க்கும்; பெயாக்கும் என்னும் பெயரே
ச்சத்தி னீற்றில் உவ்விகுதிவர, மகரம் நகரமாய்த்திரிய,
நகரத்திற்கும் உகரத்திற்கும் இடையில் தகரந் தோன்
றியது.
24. குற்றெழுத்தொடு கரம என்பதும் காரம் என்பதும்,
நெட்டெழுத்தோடு காரம் என்பதும் சேர்ந்து அவ்வவ்
வெழுத்துக்களுக்குப் பெயராம்.
(உ-ம்.) ககரம், ககாரம், சகரம், சகாரம், அகரம், அகாரம்,
உகாம், உகாரம்.
25. விகாரம் இருக்கும் நிலைமாறுதல, அது மூவகைத்து
தோன்றல், திரிதல், கெடுதல் என.
26. தோன்றல் இல்லாதது உண்டாதல் ; இதனை வட
மொழியில் ஆகமம் என்பர்
27. திரிதல் ஒன்று வேறொன்றாய் மாறுதல்; இதனை வட
மொழியில் ஆதேசம் என்பர்.
28. கெதடுல் உள்ளது அழிந்துபோதல்; இதனை வட
மொழியில் லோபம் என்பர்.
29. கண்டியம் கழுத்தில் பிறக்கும் எழுத்து.
30. தாலவியம் தாலுவில் பிறக்கும் எழுத்து ; தாலு -
எண்ணத்தின் அடியின் இருபக்கம்.
பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை