பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரவிடசப்ததத்வம். வினையியல். 34. வினையின் உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, எதிர்மறையுருபு என ஐந்து. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை இவை உடன்பாட்டு வினையில்வரும். எதிர்மறை வினையில் எதிர்மறையுருபும் வரும். நட வீடு நொ பொரும் பார் கேள் வா கூ போ திரும் செல் அஃகு மடி வே உரிஞ் தின் வவ் சீ வை உண் தேய் வாழ் இவ்வாறு முன்னிலை யேவலொருமையில் வரும் வினைகள் ஒரு வம் புள்ளன. வாரும் = வா + உம் முன்னிலை யேவற்பன்மை. தாரும் = தா + உம் ரகரம் உடம்படுமெய். உளன் = உள் + அன். உளர் = உள் + அர். செய்யாய் = செய் + ஆய், முன்னிலை யேவலொருமை. இவை பகுதி விகுதி என்னும் இரண்டுறுப்புள்ளன வந்தும் = வா + த் + உம், தகரம் இறந்தகால இடைநிலை, உம் - தன்மைப்பன்மை விகுதி. உண்டனன் = உண் + த் + அனன், இதில் அனன் என்னும் ஸர்வநாமம் விகுதியாய்வந்தது. இவை பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்புள்ளன. வருகிறான் = வா + உ + கிறு + ஆன் " உகரஞ்சாரியை. தருகிறான் = தா + உ + கிறு + ஆன் - இவை பகுதி விகுதி, இடைநிலை, சாரியையென்னும் நான்குறுப் புள்ளன. செய்யா தான் = செய் + ஆ + த்+ஆன், ஆ - எதிர்மறை விகுதி, த் - இடைநிலை. வாராதவன் = வா+ஆ + த் + அவன், ரகரம் உடம்படுமெய். இவற்றில் நான்குறுப்புக்கள் வந்தன. 35. செய்தான், செய்கிறான், செய்து, செய்தல் என்று விகுதி முதலியவற்றால் வேறுபட்ட பலவினைகளுக்கும் பாதுவாகிய உறுப்பிற்குப் பகுதி என்று பெயர். அதனோடு