2. சொல் திரிபு
1. ஈறுகேடு : ஓரம் - ஓர; தெப்பம் - தெப்ப; சாயம் - சாய, மாயம் - மாய; பொத்தல் - பொத்த; அஞ்சல் - அஞ்செ.
2. ஈறுமிகை :
தெய்வமு, கோணமு, ஏலமு, பக்கமு, பாகமு, சுங்கமு, மேனமு, கீலு, காரு, மதமு, கொட்டமு, நூலு, சமமு, கனமு, கூட்டமு, வேகமு, பட்டமு, தீபமு, பாடமு, கொஞ்சமு, பேரு, கோபுரமு, குலமு, நாளமு, களங்கமு, உருமு (இடி), பிசினி, பள்ளமு, சின்னமு, மந்தாரமு, கலகமு, கடினமு, மயிக்கமு, மொத்தமு, நாடகமு, குடும்பமு, ஒப்பந்தமு, காவலி, மந்தமு முதலிய எண்ணிறந்த சொற்கள் தமிழில் மெய்யீறாய் வழங்குவன.
3. தொகுத்தல்:திருப்பு - திப்பு; திருத்து - தித்து; உருண்டை - உண்ட; விருந்து - விந்து; சுருட்டு - சுட்ட; மருந்து - மந்து; வணக்கு (வளை) - வங்கு; காய்ச்சு - காச்சு.
4. இலக்கணப்போலி (Transposition or Metathesis) : அவன் - வாடு; அவர் - வாரு, காரு; இவன் - வீடு; இவர் - வீரு; இலது - லேது; நாம் - மனமு; அறை (கல்) - ராய்; உள் - லோ; ஆக - கா. எழுது - டெப்பதி; அரசு - ராஜு; எழு - லெய்.
அவன் என்பதிலுள்ள அவ் என்னும் பகுதி வ் + அ என்று மாறிப் பின்பு னகர வீறு டகர வீறாய் வாடு என்னும் வடிவம் பிறந்தது. இங்ஙனமே பிறவும்.
சில தெலுங்குச் சொற்கள் முதல் வேற்றுமையில் திரியாதிருந்து பிற வேற்றுமையில் திரியும்.
எ-டு:
மு. வே.
பி. வே.
மு. வே.
பி. வே.
அதி
தானி
அவி
வாட்டி
இதி
தீனி
இவி
வீட்டி
ஏதி
தேனி
ஏவி
வேட்டி
5. உயிரிசைவு மாற்றம் (Harmonious Sequence of Vowels): சொற்களிலுள்ள உயிர்கள் முன் பின்வரும் உயிர்களுக் கேற்றபடி மாறுதல் உயிரிசைவுமாற்றம் எனப்படும். தமிழில் இ ஈ ஏ ஐ என்