சேய்மை :
ஆயெ
ஆளு
ஆரு (ஆ.)
அவு
ஐகுளு
ஆகுளு (பெ.)
குறிப்பு:
1. நம (தாம்) - உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர். எங்குளு (யாங்கள்) - தனித்தன்மைப் பெயர்.
2. ஈரு (நீர்), ஆரு (அவர்) என்பவை உயர்வுப் பன்மை (Honorific plural)யாக வழங்கும்.
2. வினாப் பெயர்
யேரு = யார்? தாதவு = யாவது? யாது? தானெ = என்ன?
3. மக்கட் பெயர்
ஆள், ஒண்ட்டிகெ (ஒண்டிக்காரன்), கள்வெ (கள்வன்), குசவெ (குசவன்), செம்பு குட்டி (செம்பு கொட்டி), சோமாரி (சோம்பேறி), தோட்டி, நஞ்சுண்டெ (நஞ்சுண்டவன்), பிள்ளே (பிள்ளை), வேட்ட (வேடன்), குருக்குளு (குருக்கள்).
4. முறைப் பெயர்
அஜ்ஜெ (அச்சன்), அம்ம (அம்மை), அத்தெ (அத்தை), அக்க.
5. விலங்குப் பெயர்
ஏடு (ஆடு), ஆனெ (ஆனை), பஞ்சி (பன்றி), எயிபஞ்சி (எய்ப்பன்றி), எர்மெ (எருமை), கடம (கடமை), காடி, கத்தெ (கழுதை), குதுரெ (குதிரை), குரு (குருளை), குறி (கொறி), நறி, நாய், பில்லி (புலி), மறி, மான், கஞ்சி (கன்று).
6. பறவைப் பெயர்
கொர்ங்கு (கொக்கு), கோரி (கோழி), பாவலி (வாவல்), காடெ (காடை).
7. ஊர்வனவற்றின் பெயர்
உடு (உடும்பு), எலி, ஒந்தி, சுண்டெலி, தேள், பாவு (பாம்பு).
8. மரஞ்செடிப் பெயர்
அடும்பு (அடம்பு), அர்த்தி (அத்தி), ஆம்பல், எண்மெ (எள்), கரும்பு , கொடி, ஜோள் (சோளம்), பாஜெ (பாசி), மஞ்சள், மர (மரம்), பாகெ (வாகை), வாரெ (வாழை), பேவு (வேம்பு).