9. தட்டுமுட்டுப் பெயர்
அடப்ப (அடைப்பம்), கர (கலம்), குப்பி, கூடெ (கூடை), சட்டி, ஜாடி (சாடி), செம்பு, ஜோனிகெ (சோளிகை), தாட்டி, தொட்டில், மேஜி (மேசை).
10. உணவுப் பெயர்
அப்ப (அப்பம்), அரி (அரிசி), உப்பு, ஊட்ட (ஊட்டம்), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கலி (கள்), கூளு (கூழ்), சாரு (சாறு), தீனி, நஞ்சு, புண்டி (பிண்டி), மர்து (மருந்து).
11. ஆடையணிப் பெயர்
கொப்பு, பாசி, வக்கி (வங்கி), சல்லண (சல்லடம்).
12. ஊர்திப் பெயர்
அம்பாரி, உஜ்ஜாலு (ஊஞ்சல்), ஓட (ஓடம்), கப்பல், தேரு (தேர்), தோணி.
13. கருவிப் பெயர்
அம்பு, அர (அரம்), இக்குளி (இடுக்கி), உளி, கத்தி, கம்பி, கவணெ (கவணை), கொக்கெ (கொக்கி), கோலு (கோல்),கோளி (கோலி), சட்டுக (சட்டுவம்), செண்டு (பந்து), செண்டெ (செண்டை = ஓர் இசைக்கருவி), தித்தி, பகட (பகடை = தாயக்கருவி), பாரெங்கி (பாரை), பிர் (வில்).
14. இடப் பெயர்
அம்பில (அம்பலம்), அரு (அருகு), இடெ (இடம்), ஊட்டி ஊற்று), கடலு, கடெ (கடை), காணி, கட்ட (குன்றம்), கொட்ய (கொட்டகை), கொட்டார, கொனெ (கொனை), சுடலெ (சுடலை), சுடுகாடு, தொளு (தொளை), தோட்ட, நடு, நாடு, பயல் (வயல்), பின்னு (விண்), கணி (கேணி), பட்ண (பட்டினம்), ஊரு (ஊர்), இல்லு (இல்), காடு.
15. காலப் பெயர்
கடு (கெடு), பொர்து (பொழுது).
16. சினைப் பெயர்
அடி, இமெ (இமை), எலெ (இலை), உகுரு (உகிர்), உமி, ஏலு (எலும்பு), ஓடு, ஓலெ (ஓலை), கண்ணு, கடெக்கண்ணு, கவ (கவை), காவு (காம்பு), காயி (காய்), காலு, கொரலு (குரல் = கதிர்), கை