சில தொழிற்பெயர்கள்: ஒணகெலு (உணங்கல்), உளவு, எலமு (ஏலம்), ஒப்பந்த, நகலி (நகல்), நடப்பு, நட்டி (நட்டல் = நடுகை), நெனப்பு (நினைப்பு), பக (பகை), புகர (புகழ்), காப்பு, பேலெ (வேலை), மதுமெ (வதுவை).
19. பல்பொருட் பெயர்
அலெ (அலை), உக்கி (உக்கம்), உண்டெ (உண்டை), உசுரு (உயிர்), இர்ளு (இருள்), ஓலக (ஒலக்கம்), கரி, காணிக்கே (காணிக்கை), குத்த (குத்தகை), கூட்டு, கூவே (கூம்பு), கூலி, கொள்ளி, சிட்டிக்கி (சிட்டிக்கை), சில்லெர (சில்லறை), சில்லு, சீட்டு, சூடி (சூடு = அரிக்கட்டுக் குவியல்), பொள்ளி (வெள்ளி),தீவட்டி, நூலு, படி, ஹனி (பனி), புண (பிணம்), புதேரு (பெயர்), புடி (பொடி), பொர்லு (பொருள்), மயெ (மயம்), மூரி, முரி (மூரி), வகெ (வகை), மிடெ (விடை), வெள்ளம், பை (வை = வைக்கோல்), ஆமெ (ஆமை), கல்லு, கின்னி (குன்னி), குட்டு, ஆணு, பொண்ணு, மாதெர (மாற்றம்).
20. வேற்றுமையேற்ற பெயர்கள்
1.
யானு
அம்ம
மர
மேஜி 2.
யென்னு
அம்மனு
மரொனு
மேஜினு 3.
யெனட
அம்மட
மரட்ட
மேஜிட 4.
யெங்கு
அம்மகு
மரொக்கு
மேஜிகு 5.
யெனடுது
அம்மடுது
மரொடுது
மேஜிடுது 6.
யென
அம்ம
மரத
மஜித 7.
யெனடு
அம்மடு
மரொட்டு
மேஜிட 8.
-
அம்மா
மரா
மேஜியே
வினைச்சொல்
1. முக்கிய வினைகள்
அண்ட்டு (அண்டு), அண்ணா, அபய் (அவை), அலம்புனி (அலம்பு), அலர், அர்பினி (அழு), ஆடு, ஆய், ஆர்க்குனி (ஆர் = ஒலி), ஆரு (ஆறு), இடு, இழி (இறங்கு), உடெ (உடை), உதுர் (உதிர்), உப்ப, உப்பி (உமிழ்), ஒதெ (உதை), உரி (ஒலி), உரெ (உரை), உள்கு (உளுக்கு), ஊட் (உழு), ஊது, எக்கு, எதுருந்து. (எதிர்), எய், எரி, ஏறு, ஒட்டு, ஒடி, ஓடு, ஓது,
கக்கு, கட்டு, கடப்பு, கடெ (கடி), கப்பு, கரகு (கரை), கல், கல, கலங்கு, கபி (கவி), காதுனி (காது), காயி (காய்), குட்டு, குத்து, குரி (குறி), கூடு, கேண் (கேள்), கொணுனி (கொள்), கொதி, சாய் (சா), சுடு, கொன் (கொல்), சுத்து (சுற்று),