"பன்னிரு நிலமாவன:.... பொங்கர் நாடு.... அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால் பிற நாடாதல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு:..... பன்னிருநில மாவன:
"குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.
"இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க.
"அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா, எ- று;
"குடாவடி யுளியம் என்றவழி குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழி, கரைதல் என்பது கxருநாடர் விளிப் பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டுகொள்க" எனக் கொண்டு கூற்றாகத் தெய்வச்சிலையாரும் கூறியதே ஏற்ற உரையாம்.
தொல்காப்பியர் காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்த பழந்தீபமும் சிங்களமும் கருநடமும் வடுகும் (தெலுங்கமும்) கலிங்கமும் பிற்காலத்தில் பிறமொழி நாடுகளாய் வேறுபட்டு விட்டன. நாவலந் தேயத்திலுள்ள மொழி வேறுபட்ட நாடுகள் தமிழுட்பட மொத்தம்