உடலும் இல்ல, என்றெ வீட்டில் எச்சிலும் குப்பயும் ஆயி, இவன் ஒரு ஆணி ஆகுன்னு, ஒன்னும் இறங்ஙாத சமயம், உந்தும் தள்ளம் (அடிபிடி), நஞ்சு தின்னபோலே ஆயி, ஏந்தி ஏந்திக்கொண்டு நடக்க, கண்ணிம கூட்டியில்ல, உந்தலும் பிடியுமாக, கரகாணுக, உடல் ஒம்பதுகாணும் விறெக்க, ரண்டு கையிலும் சிரட்டபிடிச்சு போக.
வாக்கியங்கள் (சொற்றொடர்கள்)
ஞான் ஆ ஆளோடு ஈ குதிரயெ வாங்கி = நான் அவ் ஆளிடம் இக் குதிரையை வாங்கினேன்.
அச்சன் புறப்பெட்டு போய சேஷம் ஒருத்தன் வந்நு என்றெ சோறு தின்னு = அத்தன் (அப்பன்) புறப்பட்டுப் போனபின்பு ஒருத்தன் வந்து என்னுடைய சோற்றைத் தின்றான்.
என்றே செரிப்பு வெடிப்பாக்கெணம் என்னு ஞான் திவஸந் தோறும் கல்பிக்குன்னென்கிலும், நீ இது ஒரிக்கலும் நன்னாயி செய்யாறில்ல = என்னுடைய செருப்பைத் துப்புரவாக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் சொன்னாலும் நீ இதை ஒருகாலும் நன்றாய்ச் செய்கிறதில்லை.
பழமொழிகள் (பழஞ்சொல் - ம.)
அகத்திட்டால் புறத்தறியாம்.
அரி (அரிசி) எறிஞ்ஞால் ஆயிரம் காக்க.
அளவு கடன்னால் அம்ருதும் நஞ்சு.
ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணாம்.
ஆயிரம் மாகாணி அறுபத்து ரண்டர.
இக்கரனின்னு நோக்கும்போல் அக்கர பச்ச.
இரிம்பூர கல்லும் தேயும்.
ஈர் எடுத்தால் பேன் கூலியோ.
கடலில் காயம் கலக்கியது போலெ.
காமத்தின்னு கண்ணில்ல.
காற்றுள்ள போள் தூற்றணும்.
கார்யத்தின்னு கழுத காலும் பிடிக்கேணம்.
குரங்ஙின்றெ கய்யில் பூமால கிட்டியதுபோலெ.
குரக்குன்ன நாயி கடிக்கயில்ல.
கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம்.
கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம்.
தாழே கொய்தவன் ஏறே சுமக்கேணம்.
தீயில்லாதெ புகயுண்டாக யில்ல.