குறிப்புப் பெயரெச்சம்
கெல (சில), ஹல (பல), கொஞ்ச, எல்லா, சன்ன (சின்ன), தொட்ட (=பெரிய), எளய (இளைய), ஹளே (பழ = பழைய), ஹொச (புது).
குறிப்பு வினையெச்சம்
தண்ணகெ (தட்பமாய்), நெட்டனெ, பக்கென (பொக்கென), பேகனெ (வேகமாய்), மெல்லனெ முதலியன.
இடைச்சொல்
சுட்டடிச் சொற்கள்
ஆ, அகோ, அதோ, ஆக = அன்று, ஹாகெ (அப்படி), அந்து (அன்று), அந்த்த (அனைய), அந்த்து (அப்படி).
வினாவடிச் சொற்கள்
ஏ, ஏகெ (ஏன்), ஏன், எந்த்த (எனைய), எந்த்து (எப்படி), ஒ.
குறிப்புச் சொற்கள்
அய்யோ (ஐயோ), குய்யோ, மொர்ரோ (முறையோ), சீ, அம்மம்ம, ஜலஜல (சலசல), சும்மனெ, சுரீரென, சுறுசுறென, தளதள.
தொடர்புச் சொற்கள்
குறித்து, ஒளகெ (உள்ளே), கௌகெ (கீழே), முந்தெ, ஹிந்தெ (பின்பு), ஹொரத்தெ (புறத்தே), எதுரு (எதிர்), மேலெ, மேகெ, கூட, நடுவெ, பெளிகெ (வெளுக்க), முஞ்ச்செ (முந்தே), சுத்தலு (சுற்றிலும்), மொதலு, உள, கீழ், முந்தெ (முன்பு), ஹிந்தெ (பின்பு), ஹொறகெ (புறகே).
காலம்பற்றிய சொற்கள்
இன்னு (இன்று), மொன்னெ (மூன்றாம் நாள்), நின்னெ (நெருநல்), நாளெ (நாளை), நாளித்து (நாளைநின்று), ஒடனெ (உடனே).
அளவுபற்றிய சொற்கள்
மட்டிகெ (மட்டுக்கு), வரெ, வரிகூ (வரைக்கு), இன்னு (இன்னும்), மத்து (மற்று), பேரெ (வேறெ), கூட.
இணைப்புச் சொற்கள்
ஆதரெ (ஆனால்), அகலி (அகல்=அல்லது), ஆதரு (ஆனாலும்), ஆதுதரிந்த (ஆதலினாலே), உம், அல்லதெ (அல்லாதே), இல்லதெ.
விளிபற்றிய சொற்கள்
ஓயி, ஓ, எலே.