பக்கம்:திராவிடத்தின் குரல்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மராட்டிய மண்ணின் தலைநகரான பம்பாயில் 19-10-81 அன்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் பெருந்தகை ஆற்றிய அற்புத சொற்பொழிவினை நூல் வடிவமாக்கி தமிழ் மக்களின்-அறிவுத் தெளிவடைய அனைவரின் இல்லங்களிலும் இருந்திடச் செய்ய வேண்டுமென்ற எனது விருப்பத்தைப் பேராசிரியர் அவர்களிடம் தெரிவித்து வேண்டினேன். எனது வேண்டுகோளினை ஏற்று நூல் வடிவமாக்கி வெளியிட்டுக்கொள்ள அன்புடன் அனுமதி வழங்கிய பேராசிரியர் பெருந்தகை அவர்கட்கு என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்நூல் சீரிய முறையில் அமைந்திட உழைத்த தமிழோசை அச்சகத்தாருக்கும் முன்னாள் மேயர் அன்பு மிகு சா. கணேசன் அவர்களுக்கும் திரு புலவர் கோ. அண்ணாமலை எம். ஏ., பி.எட்., அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.

இதனை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,

வெல்க தி. மு. க. வின் கொள்கை!

வளர்க செந்தமிழ் அறிவு!

தமிழ்க்கொடி பதிப்பகம்,
88, தம்புச் செட்டித் தெரு,
இவண்,
கலைக்குழு கோட்டைசாமி
மண்ணடி-சென்னை - 1.