-10-
முன் தம்பிகளாகிறோம். மொழியால் தமிழர்களாகிறோம். வரலாற்றால், இடத்தால் இனத்தால் திராவிடர்களாகிறோம். துணைக்கண்டப்பிரிவால் இந்தியர்களாகிறோம். கண்டமாகக் கருதும்போது ஆசியாக்காரர்களாகிறோம். நமது கழகம் வரலாற்று முறையில் அரசியல் கழகமாக வளர்ந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு ஒப்ப வரலாறு அழைக்கும் "திராவிடம்" என்ற சொல்லையே நாமும் வழங்குகிறோம்.
சொல் குற்றமல்ல
"திராவிடம்" என்றசொல் தூய தமிழ்ச்சொல்லே என்று கூறுவதற்கும் ஆராச்சி கருத்துக்கள் இருக்கின்றன. திரை இடத்தைச் சேர்ந்தவர்கள் “திராவிடர்கள்” என்றபெயர் பெற்றனர் என்று, ஹீராஸ் பாதிரியார் கூறுவார். வடமொழியாளர். கிரேக்கர்கள் ஆகியோர் 'தமிழகத்தை' அப்பெயரால் வழங்கினர்: 'தமிழகம்' என்ற சொல்லை ‘திராவிடம்’ என்று திருத்தி வழங்கினர் என்று கொண்டாலும் அதிக தவறு ஒன்றுமில்லை. ஏன் என்றால், திராவிடம் என்ற சொல்லுக்கு அடிப்படை தூய தனித்த தமிழ்ச்சொல் திரிந்துவிட்ட காரணத்தாலேயே அது எப்படித் தமிழ்ச்சொல் அல்லாமற்போய் விடும். இப்படிப்பார்த்தால், 'திராவிடம்' என்ற சொல். அண்ணல்தங்கோ போன்றவர்களுக்குப் பிடிக்கமலிருக்கக் காரணமில்லை. 'திராவிடம்' என்ற சொல் அவருக்கும், ஆர்.கே.சண்முகனாருக்கும் பிடிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் 'திராவிடம்' என்ற சொல்லிலுள்ள குறை அல்ல. அவர்கள் தவறான கருத்துக்களின் மீது தங்களுடைய காதையும், கருத்தையும் ஆக்கிவைத்துக் கொண்டிருக்கும் குறையேயாகும்.
தவறு என்ன?
'திராவிடம்' என்ற சொல் வேதம். ஸ்மிருதி, உபநிஷத்துக்கள் எதிலும் இல்லை. ஆகவே பிடிக்கவில்லை