பக்கம்:திராவிடம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-4-



கண்டனம் செய்வோர், கேலிசெய்வோர், அலட்ச்சியமாக கருதுபவர், அசட்டை செய்பவர், யாராயினும் சரியே திராவிட நாடு திராவிடருக்கே என்பதற்காக நாம் கூறும் காரணங்களை கொஞ்சம், ஆரஅமர இருந்து யோசித்துப்பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்ளுகிறோம். பன்முறை நாம் கூறிஇருக்கிறோம் இக்காரணங்களை இம்முறை இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்தில் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஓர் முறை, அதே காரணங்களை, இம்முறை, இதற்கென ஓர் நாள் கொண்டாடும் சமயத்தில் நாட்டுமக்களுக்கு மீண்டும் ஓர்முறை அதே காரணங்களை கூறுகிறோம்:-

1. இந்தியா என்பது ஒரு கண்டம் எனவே அது பல நாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பாக் கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பாமுழுவதும் ஒரு குடைக்கீழ் இருக்கவேண்டுமென யாரும் கூறவில்லை இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

2. இந்தியா பிரிட்டீஸ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சிகொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்துவந்தது பிரிட்டீஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச்சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரே நாடு என்று கருதினர், மற்றவரையும் கருதும்படி செய்தனர்.

3. மதம், மொழி, கலை, மனோநிலை, ஒருகுடி மக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பந்தத்துவம இவைகள் தான் இன இயல்புகள் இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாக கொள்ளலாம். திராவிடரும் முஸ்லிமும் அதிகமான வித்தியாசம், இன இயல்புகளில் இல்லாதவர்கள். ஆரிய இன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/5&oldid=1634986" இலிருந்து மீள்விக்கப்பட்டது