-6-
8. ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டது துருக்கி வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும் தனிக்கீர்த்தியுடன் விளங்கும்.
9. தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இயல்புகளுக்கு ஏற்றபடி வளர்க்க ஏது உண்டாகும்.
10.அசோகர், கனிஷகர், ஹர்ஷர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிட நாடு எனத் தனிநாடு இருந்தது.
11. தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்குள்ள வசதிக்கேற்படி பொருளாதார விருத்திசெய்து கொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச்சுரண்டும் கொடுமையை ஒளிழிக்கவும் முடியும்.
12. அந்தந்த இனத்துக்கெனத் தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான் அந்தந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சம அந்தஸ்து பெறமுடியும்.
13. இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித் தான், ஆரியர்கள் இமயம் முதல் குமரிவரை உள்ள இடத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக்கொண்டு அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய், மதத்தில் குருமார்களாய் உழைத்து உருவின்றி சிதைபவர்களாய் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக் கொடுமை நீங்க வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்த வழி.
14. ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கையில்லை. ஒரு இனத்து ஆட்சியின்கீழ் மற்றொரு இனம் இருப்பது என்று சொன்னாலே அச்சம் உண-