பக்கம்:திராவிடம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-8-

வீட்டு, தாங்கள் வாழ எப்படியேனும் வழிசெய்து கொள்ளவேண்டும். என்ற கேடுகால யோசனையுங் கொண்டவர்களே. இந்தப்பிரிவினைத்திட்டத்தை எதிர்ப்பார்.

இன்னோரன்ன காரணங்களையும் ஆரிய ஆதிக்கம் வளர்ந்தவிதம் அதனால் பிற இயல்புகள் அழிந்த கொடுமை, இனி ஆரியத்தை அடக்கித் தீரவேண்டியதின் அவசியம் ஆகியவைகளை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினோம். இந்தத்திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் ஏலாதன வென்று விளக்கினோம். காரணங்களை அவர்கள் கதைகளால் வீழ்த்தவும், ஆதாரங்களை வெறும் அளப்பினால் அடக்கவும், சரித்திரத்தை சவாடலால் சாய்க்கவும், உறுதியை உறுமிக் கெடுக்கவும். நமது எதிரிகள் முனைந்து நிற்பதைக் பொருட்படுத்தாது நம் கடனைநாம் செய்தல் வேண்டும் என்று கூறினோம்.

இஸ்லாமியர்கள் இதை உணர்ந்து தங்கள் தலைவரின் திட்டத்தின்படி பணிபுரிந்து வெற்றிபெற்றுவிட்டனர் வடக்கே, இன அரசு, பாக்கிஸ்தான் ஏற்பட்டு விட்டது. அவர்கள் எந்த இலட்சியத்துக்காகப் போ ராடி வெற்றிபெற்றார்களோ, அந்த இலட்சியத்தை, அவர்கள், முழக்கமாக கொள்ளாததற்கு முன்பு நாம் கொண்டோம், அவர்கள் லாகூரில் பாகிஸ் தான் தீர் மானம் நிறைவேற்றாததற்கு முன்பு நாம் "திராவிட நாடு திராவிடருக்கே” என்று தீர்மானம் செய்தோம், நாடெங்கும் இந்த லட்சியத்தை விளக்கிப்பிரச்சாரம் செய்தோம் - செய்து வருகிறோம்.

பாக்கிஸ்தான் தேவை என்பதற்கு கூறப்பட்ட காரணங்களைவிட அதிகமான சிலாக்யமான காரணங்கள் திராவிடத்தனி அரசுதேவை என்பதற்கு உள்ளன. ஆனால் திராவிடப் பெருங்குடி மக்கள், இதனை இன்னும் உணர்ந்ததாககாணோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/9&oldid=1634990" இலிருந்து மீள்விக்கப்பட்டது