பக்கம்:திராவிட இயக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


________________

12 நிலையில், தென்னாட்டின் இணையற்ற தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையிலே ஏப்ரல் 1962இல் பேசுகிறபோது இவ்வாறு குறிப்பிட்டார்கள். I claim, Sir, to come from a country, a part in India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian Stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarathi. As Robert Burns has stated, "A man is a man for all that, I say that I belong to the Dravidian stock, and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination." தலைவரவர்களே! இந்தியாவின் பகுதியாகத் தற்போதுள்ள ஒரு நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அங்குள்ள மக்கள் ஒரு வேறுபட்ட இனமாயினும் முற்றும் எதிரான இனமல்ல என்றே கருதுகிறேன். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன், திராவிடன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதனாலேயே நான் வங்காளியருக்கோ அன்றி மராத்தியருக்கோ அல்லது குசராத்தியருக்கோ எதிரானவன் என்று பொருளாகாது. இராபர்டு பான் கூறியுள்ளதைப் போன்று, "மனிதன் என்பவன் எந்த இனமாயினும் மனிதனே.” - "நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொள்வதற்குக் காரணம் என்னவெனில், ஒருவகையில் திட்டவட்டமானதும், தனித்தன்மை வாய்ந்ததும், வேறுபட்டதுமான ஒரு பண்பினை இந்தச் சமுதாயத்திற்கு வழங்கக் பரந்து விரிந்த கூடியவர்களாகத்