பக்கம்:திராவிட இயக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


________________

15 இன்றைய தமிழ் நடை அவர்கள் பேசிய பேச்சு நடையா என்பதெல்லாம் வேறு. அந்தத் தொன்மக்களுடைய வழியிலே வந்த தமிழர்கள் நாம் என்பது இங்கு 'நீராருங் கடலுடுத்த' என்று தொடங்கிப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மூலம் நாம் உணரக்கூடியது. "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந் துளுவும் உன்னு தரத்து உதித்து எழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!" என்று அப்பாடலின் பிற்பகுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பாடியுள்ளார். அவர் அப்படிப் பாடியதற்கே மிகவும் முக்கியமான காரணம் தமிழ் நீசமொழி, தமிழ் சூத்திரர் மொழி, சமற்கிருதம் தேவபாடை, மந்திரமொழி, எல்லா வகையிலேயும் தகுதியில் உயர்ந்தது; தமிழ் தகுதியற்றது, திருமூலர் காலம் முதல் இறைவனை வழிபடுவதற்கேகூடச் சமற்கிருதந்தான் அர்ச்சனை மொழியாகப் பயன்பட்டது என்று சொல்லும் நிலைமை நாட்டில் இருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரனார் தமிழுக்கு உள்ள தகுதி வடமொழிக்கு இல்லை என்பதை வலியுறுத்த அவ்வாறு பாடினார். தமிழின் மாட்சியை விளக்க நூற்றுக்கணக்கான சான்றுகள் தரமுடியும். அதை விரிவாக விளக்க இது இடமன்று. எனவே, வழக்கிழந்த வடமொழிக்குத் தமிழைவிட உயர்வான நிலை ஏன்? என்னும் உணர்வே அதற்கு) அடிப்படையானது. சென்னைப் பல்கலைக் கழகத்திலேகூட 1926வது ஆண்டு வரையில், புலவராக வடமொழிப் பயிற்சியுடன்) இணைத்துத்தான் தமிழ் படிக்க முடியும் என்ற நிலை