பக்கம்:திராவிட இயக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


________________

16 இருந்தது. தனியாகத் தமிழ் படிக்கச் சென்னைப் பல்கலைக்கழகத்திலே உரிமை இல்லை. மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகப் படிக்கும் வாய்ப்பு முதன் முதல் இடைநிலை வகுப்பில் 1926ஆம் ஆண்டிலும், இளங்கலை வகுப்பில் 1930 ஆம் ஆண்டிலுமே ஏற்படுத்தப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றுவதன் இன்றியமையாமையை வலி யுறுத்த, தமிழுக்காக ஒரு பல்கலைக்கழகம் தேவை என்று கூற வேண்டிய நிலை இருந்தது. ஆந்திராவிலே தெலுங்குக்காக ஒரு பல்கலைக் கழகம் கேட்டு, சி.ஆர். ரெட்டி அவர்கள் ஆந்திரப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அதன் மறுவிளைவாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருக்கொண்டது. தமிழ்மொழியைத் தாழ்த்துவதற்கு எவருக்கும் நியாயமான உரிமை கிடையாது. ஆனாலும் காலப் போக்கில் வரலாற்றில் தாழ்த்திவிட்டார்கள். தமிழன் வீட்டுத் திருமணத்தைக்கூடத் தமிழிலே நடத்துவதற்கு உரிமை அற்றவர்களாகத் தமிழர்கள் - திராவிடர்கள் ஆகும் அளவுக்கு, வடமொழிக்கு ஓர் ஏற்றமும் உயர் தகுதியும் கொடுக்கப்பட்டன. வடமொழியிலே உயர்ந்த தத்துவச் சிந்தனை இருக்குமானால், அந்தத் தத்துவத்திலே திளைப்பவர்கள், மக்களின் தாய்மொழியான தமிழை இழிவானதாகக் கற்பித்ததேன்? தமிழ் மக்களின் இறைவழிபாட்டுக்குக்கூடத் தமிழுக்குத் தரவேண்டிய உரிமைநிலை மறுக்கப்படும் அளவுக்குத் தமிழ் இழிவுபடுத்தப்பட்டது. தமிழ் பேசுகிற மக்கள் இழிந்த பிறவி, தாழ்ந்த சாதி மக்கள் என்ற உணர்வுக்கு ஆளான காரணத்தினாலேதான் அவர்தம் மொழியான தமிழ் தாழ்த்தப்பட முடிந்தது. வடமொழியின் தாக்கத்தால் தமிழில் இருந்து பிரிந்த தெலுங்குக்கும், கன்னடத்திற்கும் மலையாளத்திற்கும் இந்நிலை பொருந்தும். அந்தக்