பக்கம்:திராவிட இயக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


________________

18 அடையாளம் காட்டப்படுகின்ற தென்னாட்டு இனத்தைக் குறிப்பிடுகிறேன். அதேபோன்று ஒரு வகை உறவு காட்டக்கூடிய இன்னோர் இனம் இருக்குமானால், அவர்கள் கருப்பு நிற நீக்ரோக்களாக இருப்பார்கள். வெள்ளை நிறத்தார் அல்ல. அதற்கு மேலும் தொடர்பு காட்டக்கூடியவர்கள் இருப்பார்களேயானால் இப்போது பெரும்பாலும் அழிந்துவிட்ட அமெரிக்கப் பழங்குடிகளான சிவப்பு இந்தியர்களாக இருப்பார்கள். "முந்திய நாளினில் அறிவும் இலாது, மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது, செந்தாமரைக் காடு பூத்தது போலே, செழித்தஎன் தமிழே, ஒளியே, வாழி!" என்றும் "மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ் மக்களென் றேகுதித் தாடுவமே! கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல கதியினிக் காட்டினர் தமிழரென்றே!' என்றும் புரட்சிப் பாவேந்தர் பாடினார். உலக நாகரிகத்திற்கு வித்திட்டவர் தமிழர் என்ற கருத்தினை அவ்வாறு அவர் குறிப்பிடுகிறார். உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் என்பது மொழி நூல் ஆசிரியர்கள் பலருடைய கருத்து. ஆனால், உலகம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகத்திலே மேற்கு நாடுகளிலே வழங்குகிற கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் போன்ற மொழிகளின் பல்வேறு சொற்கள் தமிழோடு - திராவிடத்தோடு வேர்ச்சொல் தொடர்புடையவை என்பது யாழ்ப்பாணம் நல்லூர் ஞானப்பிரகாசர் என்ற அறிஞரால் எடுத்துக்காட்டப்பட்டு, அந்த அடிப்படையில் ஒப்பியல் மொழி நூல் அறிஞர் தேவநேயப் பாவாணரால் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழின் வேர்ச் சொற்கள்