பக்கம்:திராவிட இயக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


________________

19 ஐரோப்பிய மொழிகளில் காணக்கிடப்பதை மொழி ஆய்வாளர் ஞானகிரி நாடார் விரிவாக ஆராய்ந்து தெரிவித்துள்ளார். சப்பான் நாட்டு அறிஞர்கள் அவர்தம் மொழிக்கும், தமிழுக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டுகின்றனர். மொழி, கலாச்சார அடிப்படையில், சீன மொழியிலே கூடத் தமிழ்க் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது. புத்தமதம் வடபுலத்திலே தோன்றினாலுங்கூடப் பின்னர்த் தென்னகத்திலே வளர்ந்து துளிர்த்திட்ட காலத்தில் அம்மதத்தில் தேர்ந்த ஞானிகளாகித் தத்துவ விளக்கம் செய்த பலர் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள். இத்துணைப் பெருமைகள் இருந்தாலுங்கூட இந்தியா முழுவதிலும் திராவிடப் பண்பாடு, கலாச்சாரம் மதித்துக் கருதப்படாமலே ஆரியக் கலாச்சாரமே நிலவுவதாகக் கருதப்பட்டது. பாரதியார் பரந்த உள்ளம் படைத்த தேசியக் கவிஞர். அவருக்கு உண்மை என்று மனத்தில் தோன்றியதை மறைத்தவர் அல்லர். ஆனால் அன்றைக்கு இருந்த சூழ்நிலையின் தாக்கத்தால் அவர் இந்தியர்களைப் பெருமைப்படுத்த ஆரியநாடு, ஆரியக் கலாச்சாரம், ஆரிய மைந்தர்கள், ஆரிய வீரர்கள் என்றெல்லாம் போற்றிப் பாடியிருக்கிறார். ஏனென்றால், ஆரிய திராவிட இனவேறுபாடு பற்றி, ஆரியத்தால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காத காலம் அது. அந்தச் சூழ்நிலையிலும் இராமசாமி சாத்திரி என்னும் வரலாற்று ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார். During the Vedic age we have reason to infer that the Tamilians or Dravidians inhabited this land from the Himalayas to Cape Comerin and beyond and several of the Tamil Princes in Northern India were well versed in the philosophy of the Arrivars. Probably it was to one of these rulers, that the four Brahmans of the Chandokya Upanishad resorted for spiritual