பக்கம்:திராவிட இயக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


________________

20 enlightenment. In the process of time it came to pass that many of the ideal and words of this system found a prominent place in some of the Vedic songs and Upanishads, and a cycle of Sanskrit literature called Tantric or Agamic came into being as adoptions of the mystic lore of Tamil hymns. (The Hindu culture and Modern Age - Page - 381) - ஆரியர்களின் வேதப் பண்பாட்டுக் காலத்தில் இந்நிலத்தில் தமிழர்கள் திராவிடர்கள் இமயத்திலிருந்து குமரி முனை வரையிலும், அதற்கப்பாலும் பரவி வாழ்ந்திருந்ததுடன் வடஇந்தியாவில் இருந்த தமிழ் மன்னர்கள் பலரும் அறிவர்களின் (சித்தர்) தத்துவத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று நாம் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. சாந்தோக்கிய உபநிடதத்தில் கூறப்படும் பிராமணர் நால்வரும் ஆன்மீக ஞானத் தெளிவு பெற இந்தத் தமிழ் மன்னர்களில் ஒருவரைத்தான், அணுகி வேண்டியிருக்க முடியும். காலத்தின் போக்கில் இந்த (தமிழ்) நெறியில் பிறந்த சிந்தனையும் சொற்களுமே வேதப் பாடல்கள் சிலவற்றிலும் உபநிடதங்களிலும் வெளிப்படத் தனித்துத் தோன்றும் வகையில் இடம் பெற்றுள்ளன. இறை வழிபாட்டுத் தமிழ்ப்பாடல்களுள் சித்தர்களின் (Mystic) ஆன்மீகப் பாடல்களை அப்படியே தழுவியதாகவே சமற்கிருத இலக்கியங்களுள் ஒரு தனிப்பிரிவாகக் காணப்படும் தாந்திரிகம், ஆகமம் முதலான சாத்திரங்கள் இயற்றப் பட்டுள்ளன என்று இராமசாமி சாத்திரி குறிப்பிடுகிறார். சாத்திரி என்று நான் குறிப்பிடுவது அவர் வேதத்தை வெறுக்கும் நோக்கம் உள்ளவர் அல்லர், பொதுநோக்கம் உள்ளவர் என்பதற்காகவே. தென்னகத்தில் தோன்றிய அறிவரின் ஆழ்மன உணர்வுகள் தொடர்பான கருத்துக்கள் வடமொழியில் இடம்