பக்கம்:திராவிட இயக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


________________

22 காணப்படும் இந்துப் பண்பாடாக, திராவிட மக்களின் செல்வாக்கின் (தாக்குரவின்) விளைவாகவே மாற்றம் அடைந்துள்ளது. அவர்கள் தந்தையாக மதித்த வானமோ, அன்றி வேறு எந்த ஒளி உமிழும் கோளோ, மேலிருந்து யாகம் செய்பவரைக் காண்பதாகவும், அவர்கள் வழங்கும் இறைச்சியையோ, தசையையோ, ரொட்டியையோ மதுபானத்தையோ (சுரா) ஏற்பதாகவும் கருதிடும் நிலையிலேதான் தொன்மையான காலத்தில் வழிபாடு பற்றிய ஆரியரின் எண்ணம் இருந்தது. ஆனால் விரைவிலேயே (திராவிடரின்) பூசை அல்லது (உருவ) வழிபாட்டுமுறை (ஆரியரின்) ஓமம் அல்லது யாகத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது. திராவிடரின் மதத்தில் சிறப்பான இடம் பெற்ற திரு உருவ வழிபாடு ஆரியர்களால் ஏற்கப்பட்டது. உயிர்கட்குக் கேடு செய்யாமையும், புலால் உண்ணாமையும் ஆகிய நெறிகளும் இடம் பெற்று வளரலாயின. வேத மரபு வழி (திராவிடர்களின்) ஆகமத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டது. அதனால் இன்றைய இந்துப் பண்பாடு வேதத்தின் செல்வாக்கிற்கு ஈடாக, ஆகமத்தின் செல்வாக்கிற்கு ஆளாகி இருப்பதைக் காணமுடிகிறது. இந்து மதத்தில் ஆரியமும் திராவிடமும் ஒன்றன் பக்கம் ஒன்றாக இடம் பெற்றிருக்கவில்லை. சிறந்த நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த திராவிடர்களுடன் கொண்ட தொடர்பினால், (இறைக்கொள்கை அறியாத) வேத மதம் இறை நம்பிக்கை கொண்ட மதமாக மாற்றமடையலாயிற்று." வேத வழிப்பட்ட, ஆரிய நாகரிகம், இந்த இந்தியாவிலே தோன்றிய தலையான நாகரிகம் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள் அல்லவா? டாக்டர். இராதாகிருட்டிணன் சொல்கிறார், TILINGUA