பக்கம்:திராவிட இயக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


________________

23 'ஆரியர்களின் வடமொழிச் சாத்திரங்களில் இடம் பெற்றிருக்கிற சில தத்துவச் செய்திகள் எல்லாங்கூடத் திராவிடர்களிடமிருந்து ஆரியர்கள் பெற்ற அறிவு காரணமாகவே சமற்கிருத சாத்திரத்தில் இடம் 头 பெற்றிருக்கின்றன' என்னும் கருத்தைக் கூறியுள்ளார். அந்த நாளிலே திராவிட இன மக்கள்தான் இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள். அந்நாளில் வந்து குடியேறியவர் ஆரியர் என்பது வரலாறு. அந்த அடிப்படையில்தான் நாட்டின் கலாச்சாரம் உருவானது குறித்து விளக்கியுள்ளார். தனிப்பட்ட மனிதரை, அவர்தம் கலாச்சாரக் கோட்பாட்டால் அன்றி வேறு வகையில் ஆரியராகவோ திராவிடராகவோ கருதுவதற்கு இன்று அவசியமில்லை. இன்றைக்கு 3000 ஆண்டுகட்கு முன் மக்கள்தொகை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஆற்றோரங்களில் மட்டுந்தான் மக்கள் தொகை கொஞ்சம் அதிகமிருக்கும். அந்நாளில் இந்தியா (பரத கண்டம்) முழுவதும் 3 - 4 கோடி பேர்தான் வாழ்ந்திருக்கலாம். வடபுலத்தில் 2-கோடியும் தென்னாட்டில் 1-கோடியும் தமிழகத்தில் 50-இலட்சமும் இருக்கலாம். அந்நாளில் வந்தேறிய ஆரியர்களும் 2-இலட்சம் முதல் 3-4 இலட்சம் வரை இருக்கலாம். - ஆனால், கற்பிக்கப்படும் செய்திகளில் -புராணங்களில் முப்பத்து முக்கோடி தேவர் என்பது அக்கால ஆரியரின் கருத்துப்படி மறைந்த அவர்தம் முன்னோரின் தொகையாக வேண்டும். பாரதப்போரில் இடம் பெற்றதாகக் கற்பிக்கப்படும். படைவீரர் தொகையோ இக்கால இந்தியப் படைவீரர் தொகையையும் மிஞ்சும் எனில், அதன் உண்மைத் தகுதியை நாம் தெளியலாகும். ஆனால், அப்படிப்பட்ட பொய்யான கற்பனைகளாலேயே புராண இதிகாசங்கள் மக்களை மயக்குதற்கு ஏதுவாயின. அப்படிப்பட்ட தொன்னாளில்