பக்கம்:திராவிட இயக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


________________

27 இந்திய நாகரிகம் வந்தேறிய ஆரியத்தினால்தான் தோன்றியது என்னும் கொள்கைக்கு எவ்விதமான ஆதாரமும், பழங்குடியினரான தாசர்களை நாகரிகமற்றவர் என்று கருத இடமளிக்காத இந்திய இலக்கியத்தில் இல்லை எனினும், உலகில் காணப்படும் மதிப்பு மிக்கவை எவையாயினும், ஆரியரிடமிருந்து தோன்றியவையாகவே இருக்க வேண்டும் என்னும் கருத்துடைய இந்தோ செருமானியர்களின் கோட்பாட்டின் விளைவாக உருவானதே அக்கொள்கை. இந்தியாவுக்கு வந்த இந்தோ செருமானிய அறிஞர்கள்தாம் முதன் முதலாக இங்குச் சமற்கிருதத்தில் இருந்த பல நூல்களை மொழி பெயர்த்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் கொண்டிருந்த ஆரியன் என்ற இனக் கலாச்சார உணர்வுதான். இந்தோ செருமானியர் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அந்த அறிஞர்கள் எல்லோருமே உலகத்தில் மதிக்கப்படக்கூடிய அனைத்துமே ஆரியர்களிடமிருந்தே பிறந்ததெனும் கருத்தினராதலின் ஆரியர்களின் நாகரிகமே இந்தியாவினை நாகரிகப்படுத்தியது என்ற தவறான கருத்தை அன்று கொண்டுவிட்டார்கள். இந்திய நாகரிகம் என்பது வேத காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி இன்று காணப்படும் இந்து மதத்தின் இன்றியமையாத கூறுபாடுகள் (பண்பாடுகள் பலவும் மொகஞ்சதாரோவில் வாழ்ந்த (திராவிட) மக்களிடம் ம் பெற்றிருந்தவையே ஆகும். சிந்து நதிக்கரை மக்களிடம் நிலவிய மதத்தின் வழிப்பட்டதாக வந்ததே இந்துமதம் என்பதை எடுத்துக் காட்டுதற்கு வேண்டிய பேரளவிலான சிதிலங்களை நாம் அகழ்வாய்வினால் கண்டெடுத்துள்ளோம் என்று, அந்த இடங்களில் காணப்பட்ட மதச்சார்பு காட்டும் பொருள்களைக் குறித்து ஆய்வு நடத்திய சர் ஜான் மார்ஷல் கூறுவதுடன்,