பக்கம்:திராவிட இயக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


________________

28 உண்மையில் சிவனும், காளியும், லிங்க வழிபாடும் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற இந்து மதத்தின் பிற கூறுபாடுகளும் ஆரியர் வருகைக்கு நெடுங்காலம் முன்னரே இந்தியாவில் நிலை கொண்டிருந்தவையாகும் என்றும் தெரிவித்துள்ளார். வரலாற்றில் இருக்கிறதே இன்றைக்கு உயர்வாக எவ்வெவற்றைக் கருதுகிறோமோ அவை மொகஞ்சதாரோவிலே, அரப்பாவிலே நிகழ்ந்த அகழ்வு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளாக இருக்கின்றன. இவற்றைக் குறிப்பிடுவது ஆரியர்கள் வந்தவர்கள் என்பதால் அவர்களை அந்நியராகக் கருதவேண்டும் என்பதற்காக அல்ல. 'திராவிடர்' என்னும் ஓர் இனம் இந்த நாட்டில் இருந்ததையே பல பேர் அறியாதவர்களாக இருப்பதால் நாட்டின் திராவிட இனம் உரிய இடம் பெறாததாக என்பதாலும், திராவிட இன வரலாற்று உண்மைகளை நாம் அறியவேண்டும் என்பதற்காகவும், இந்தச் சூழ்நிலையிலே மெல்ல மெல்ல வேதக் கருத்து வருணாசிரம தரும் கலாச்சாரமாக வளர்ந்தது. வேதத்திலே திட்டவட்டமாகப் பேசப்படாத வருணாசிரம தருமம், பிற்காலத்திலே நிலைநாட்டப்பட்டது; பகவத் கீதை அதை வலியுறுத்துகிறது. நால் வருணத்தை நானே படைத்தேன் என்று கிருட்டிணன் பகவத் கீதையிலே சொல்லியுள்ளார். இப்போது அந்தக் கிருட்டிணன் மக்களிடத்தில் வருவாரா என்றால் வரமாட்டார். ஏனென்றால், பிராமணனாகப் படைக்கப்பட்டவர் என்பவர் கூடக் கிருட்டிணன் படைப்பை முறையான செயல் என்று இன்று ஏற்கமாட்டார்கள்; காலமும் மாறியுள்ளது; அறிவும் வளர்ந்துள்ளது. " GOOT GOOT IT! படைத்த வருண முறையாலே நாங்களல்லவா பலருடைய கண்டனத்துக்கு ஆளாகிறோம்!' என்று சொல்லக்கூடிய உணர்வு அவர்களுக்குக்கூட வரும்.