29
________________
29 மேலும், கிருட்டிணன் என்று ஒருவன் இருந்தான் என்பதே ஆராய்ச்சிக்கு உரியதாகியுள்ளது. 'பாரதப் போரிலே கலந்து கொண்டாரா? தேர் ஓட்டினாரா?' என்பதும் கேள்விக்குரியது. தோன்றிய அவதாரங்களிலே அதிகம் பொய் சொன்னதாக அறியப்படும் அவதாரம் கிருட்டிணன்தான். மூன்று நான்கு மனைவியரை மணந்திருந்த கிருட்டிணனை தெய்வீகப்பிறப்பு என்று கருதி, துவாரகையில் இருந்த கோபிகள் எல்லோரும் அவனைக் காதலித்து உறவுகொண்டதாகக் கூறும் அளவுக்கு, கிருட்டிணன் திருவிளையாடல் புரிந்ததாகக் கதைகள் இருக்கின்றன. பகுத்தறிவு எண்ணம் கொண்ட இந்துமத வழியினர் பலர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் காலத்திலே பிறந்த கற்பனைகளே பின்னர் மத நம்பிக்கையாக ஆகியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி Non Brahmin Regeneration in South India and the D.M.K., 1873 - 1943 என்ற பொருளில் ஆய்வு நடத்திய அறிஞர் கல்வேக்கர் என்பவர் பின்வருமாறு சொல்கிறார்: "இந்தியாவில் பொருளாதார, அரசியல், சமுதாய வாழ்வில் பிராமணீயம் மீண்டும் பிரதான ஆதிக்கம் செலுத்துவதற்குப் பிரிட்டிசு ஆட்சி உதவி செய்தது. இந்தோ செருமானிய அறிஞர்களேகூட வடமொழி அடிப்படையிலேதான் இந்தியாவைப் பார்த்தார்கள். ஆகவே, * பிரிட்டிசு அரசிடமும் அந்த உணர்வுதான் இருந்தது. இந்தியக் கலாச்சாரம் சமற்கிருத ஏடுகளிலேதான் முழுமையாக இருக்கிறது என்று கருதினர். அந்த ஏடுகள் எந்த அளவு உண்மை கூறும் தகுதியுடையன என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க அவர்களால் முடியாது. இரண்டாவதாகப் புலமை மிக்கவர்கள் - பண்டிதர் என்று சொல்லப்படுகின்ற பட்டியலிலே அந்தக் காலத்திலே சமற்கிருத அறிஞர்கள்தாம் இருந்தார்கள். அடுத்ததாகப் பாரசீக அறிஞர்கள் இடம் பெற்றனர். பாரசீக அறிஞர்கள்,