பக்கம்:திராவிட இயக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


________________

30 மட்டுமே சமற்கிருத அறிஞர்கள் ஆகிய இரு சாராரை வைத்துக்கொண்டு அவர்கள் கருத்துப்படிதான் நீதிமன்றங்களிலே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. பிராமணீயம் பிரதான ஆதிக்கம் செலுத்துவதற்குப் பிரிட்டிசு ஆட்சி உதவிகரமாக இருந்தது. ஆகவே "பசியினாலும், அடக்கு முறையாலும் துன்பப்பட்ட தென்னாட்டுச் சமுதாயத்தின் தாழ்ந்த சாதி வகுப்பு மக்கள், பொருளாதாரத் துறையிலும் வளர வழியின்றித் தடைப்படுத்தப்பட்டுக் கிடந்தனர்”. அக்காலத்திலே, வடலூர் வள்ளலார் அந்த மக்கள் நிலையை எண்ணிப் பார்த்து, கழிவிரக்கம் கொண்டு வருந்தி, அவர்தம் பசிதணிக்கும் வழிநாடிச் செயல்பட்டிருக்கிறார். மக்கள் பலர் பல நாட்கள் பசியிலே நொந்துபோய் வாடிச் சோர்ந்து, பல ஆண்டுகள் வாழக்கூடியவர்கள் சில ஆண்டுகளிலே மாண்டு போவதை வடலூர் வள்ளலார் பார்த்ததனால் பசித்தவர்க்கு உணவு வழங்குவதையே தலையான அறமாகச் சொன்னதுடன் தரும உணவுச் சாலையும் ஏற்படுத்தினார். அப்படிப்பட்ட வறுமையின் கொடுமையில் உழலும் அளவுக்கு வருமானம் (கூலி) பெறமுடியாமல் பசியால் வாடிக்கிடந்தனர் தமிழர்கள். மேலும் கல்வேக்கர் கூறுகிறார்: "அன்றிருந்த நிலைமையை அடிமைத்தனம் என்றே கூறலாம். அது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நிலவியது. ஒரே மதத்தைச் சார்ந்தவர்களில் மேல்சாதியினர் சமுதாயத்தைப் பிரித்து வைத்திருந்த விதம் அடிமைத்தனத்தை ஏற்படுத்தியது. பிராமணீயத்தை அமுல்படுத்தியதால் ஏற்பட்ட பிளவுகள், பாகுபாடுகள் காரணமாக, ஒரு சாதியினர் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டாலோ ஒதுக்கி வைக்கப்பட்டாலோ அந்தப் பிரச்சினை குறித்து இதர சாதியினர் ஒன்று சேர்ந்து அதை