பக்கம்:திராவிட இயக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


________________

41 நீங்களும் உங்களை உடன்பாடாக ஆக்கிக் கொள்ளுங்கள், மனிதராகுங்கள்!” என்று அந்நாளிலேயே பாரதியார் அறிவுறுத்தினார். பிறிதோர் இடத்திலே "தமிழ்நாட்டிலே அறிவு வளர்க்கும் சாத்திரங்கள் இல்லை; அறிவியல் அடிப்படையிலே எண்ணங்களை வளர்க்கிற ஏடுகளான உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பொய்க்கதைகளை மூடர்களிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்" என்கிறார் பாரதியார். சமூகத்தைப் பிளவுபடுத்திச் சீர்குலைக்க ஏதுவாகும் சாத்திரக்கொள்கை எதுவாக இருந்தாலும் அதன் உண்மையை உணர்ந்தவர்கள் அதனை ஒப்ப முடியாது. அந்த முறையிலேதான் பாரதியார் சமூகநீதி விளைவிக்கும் சமத்துவ நோக்கத்திற்காக வாதாடியிருக்கிறார். இந்தியாவிலே பிராமண ஆதிக்கம் வளர்ந்து இருந்ததால், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நின்ற இசுலாமிய சுல்தான்களின் ஆட்சி இருந்த காலத்திலுங்கூடப் பிராமணர்களுடைய செல்வாக்கை இசுலாமிய மன்னர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இசுலாமிய சமூகத்தினுடைய அல்லது மதத்தினுடைய செல்வாக்கை அவர்கள் வளர்க்க விரும்பிய அதே நேரத்தில், இந்து சமூகத்தினுடைய தலைவர்களாக யாரைக் கருதினார்களோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தார்கள். பிரிட்டிசார் ஆட்சியிலேயும் சமுதாய ஆதிக்கம் பெற்றவர் என்ற முறையில் வருணதரும் மதவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பிராமணத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டது. கேரளத்தின் புகழ்பெற்ற சீர்த்திருத்தச் செம்மல் நாராயண குரு என்பவர் - பெரியார் அவர்களுக்கு முன்னரே புகழுடன் விளங்கியவர். ஈழவர்கள் என்று சொல்லப்படுகிற