பக்கம்:திராவிட இயக்கம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


________________

42 தாழ்த்தப்பட்ட மக்களை உரிமை உணர்ந்த மனிதராக்கினார். அவர் ஒரு சிவன் கோவில் அமைத்தார். அவர் ஒரு யோகி. அந்தச் சிவன் கோவில் எழுப்பிய போது வைதிக-நம்பூதிரி பிராமணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தத் தீண்டாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிவன் விக்கிரகத்தை வைத்து வழிபடலாமா? நாங்கள் அல்லவா சாத்திரப்படி மந்திரங்கள் சொல்லிச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது நாராயண குரு சொன்னார், "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் எங்கள் சிவலிங்கம் ஈழவர்கள் சிவலிங்கம். இது உங்கள் பிராமணச் சிவலிங்கம் அல்ல என்றார்." அவருடைய சீடரான சுவாமி தரும தீர்த்தா, என்பவர் History of Hindu Imperialism (P 159 - 160) "இந்து எதேச்சாதிகார வரலாறு" என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார். "ஆங்கிலேயரின் பொது நோக்கினாலும் நல்லெண்ணத்தாலும் பிராமணர்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்குவதற்குப் பதிலாக, அவர்கள் ஆட்சியினை நம்பியிருந்த எளிய மக்கள் மீது, பிராமண ஆதிக்கம் நீடித்து நிலைக்க உதவினர்" மேலும் அவர் அதன் காரணங்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். "ஆங்கிலேயர்கள் உயர்ந்தவையும் மிகுந்த வருவாய் உள்ளவையுமான நம்பிக்கைக்குரிய பதவிகளில் பிராமணர்களை நியமித்தனர். ஆங்கிலேயக் கம்பெனி அதிகாரிகளுக்கும் புரோகிதர்களுக்கும் லாபம் தரும் வகையில் கோயில்களைப் புதுப்பித்து, விக்கிரக வழிபாடு, உற்சவங்கள், நடன மாதர்களின் நாட்டியம் ஆகியவை நடைபெற ஆதரவு தந்தனர்.