பக்கம்:திராவிட இயக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


________________

43 இந்துக்களின் சாதி ஆதிக்கச் சின்னமாக நிலவிய சாதிக் கச்சேரிகளை சாதிக் கச்சேரி என்றால் அந்தக் காலத்திலே பிராமணர்களே நீதிபதியாக அமர்ந்து நடத்தும் நீதிமன்றம் நடத்த உதவினர். பஞ்சாயத்திலேகூட, கோயில் இருக்கிற ஊரிலே உள்ள பஞ்சாயத்து எனில், பிராமணர்களும், அர்ச்சகர்களும் அங்கே அமர்ந்து, அவர்கள்தான் வருகிற வழக்குகளை எல்லாம் விசாரித்துத் தீர்ப்பளிப்பார்கள். இந்து பிராமணர்களின் ஆதிக்கச் சின்னமான சாதிக் கச்சேரிகளாகிய நீதிமன்றங்களைச் செயல்படுத்தினர். 3 காலத்தால் மறைந்த மனுதருமம் முதலான சாத்திரங்களை மறுபடியும் கைக்கொண்டு, அது அதிகாரபூர்வமான இந்து மதச் சட்டங்களில் நிலைபெற ஆதரவு அளித்தனர். மனுதருமத்தையே இந்துச் சட்டமாக 4 ஏற்றுக் கொண்டார்கள்." மனுதருமம் இந்துச் சட்டமாகாது; ஏனெனில் இந்து என்றால் பிராமணர் (ஆரியர்) LOLOLOGUGUT. Hindu is not a Religion. Several religions practised by the people of this land are called by the name of Hinduism. இந்த நாட்டிலே எத்தனையோ மாறுபட்ட மதங்கள் வழங்கி வருகின்றன. ஆதி சங்கரரே ஆறு மதங்கள் என்று பிரித்துப் பேசியுள்ளார். உபநிடதங்களைக் கொண்டு பார்த்தால் பல்வேறு தத்துவங்கள், பல்வேறு மதங்கள் நிலவுவது அப்படிப்பட்ட நிலையில் முசுலீம் அல்லாதார், கிறித்தவர் அல்லாதார் என்னும் நோக்கில் இந்திய நாட்டுமக்கள் அனைவரையும் "இந்து" என்று வெள்ளையர் அழைத்தனர். இந்து என்னும் பெயர் திராவிடரையும் குறித்தது. ஆயினும், இடைக்காலத்தில் மங்கிப்போய்விட்ட மனுதருமத்தை மறுபடியும் இந்துக்களுக்குரிய சாத்திரமாக ஆங்கிலேயர் ஏற்றுக் கொண்டனர். உண்மை.