பக்கம்:திராவிட இயக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


________________

45 அவர்களுள் சிலர், வைதிக முறையில் நிகழ்ந்த விக்கிரக ஆராதனையை மனித சமுதாயத்தை மகிழ்விக்கும் கலாச்சாரம் என்று கூறிப் புகழ்ந்தனர். தியசாபிக்கல் சொசைட்டி ஏற்படுத்திய அன்னிபெசண்ட் அம்மையார், இந்தியாவில் வேத நாகரிகத்திலேயிருந்து பிறந்து, இன்றைக்குப் பின்பற்றும் வைதிக முறைகள் எல்லாம் மிகவும் உயர்ந்தவை, மதிக்கத்தக்கவை என்று உலகத்துக்குச் சொன்னார். அதைப் பலபேர் நம்பினார்கள். அதனுடைய விளைவு திராவிட இனம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது மட்டுமன்றி, திராவிட இனத்தின் மீது பிராமண சாதியினரின், ஆதிக்கம் வளர்ந்தது. பிராமணர்கள் போற்றிய மொழி மதம் கலாச்சாரம் ஆ கியவை ஒரு தனி ஆதிக்க சக்தியாக வளர்ந்த காரணத்தாலேதான், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், தமிழர்களுடைய சமயச் சிந்தனைகள், சித்தர் வழிபாட்டு முறைகள், தமிழர்கள் நடத்திய சிறந்த ஆட்சிமுறைகள், தமிழிலே பிறந்த ஒப்பற்ற அறப் பொது நூலாகிய திருக்குறளுடைய சிறப்பு முதலான அத்தனையும் மதிப்பிழந்து மங்கிப் போகிற நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டது. அதே நிலைதான் தென்னாட்டில் வாழும் திராவிட மொழிகளைப் பேசும் மக்களுக்கெல்லாம் ஏற்பட்டது. அதனாலேதான் 1916வது ஆண்டு பி.டி. தியாகராயர் இந்த நிலைமைக்கான காரணம் அத்தனையையும் விளக்காவிட்டாலுங்கூட, தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில் திட்டவட்டமாகச் சொல்வது இது: அவர் "அன்றைக்கு இருந்த ஆங்கிலேய அரசு எந்த அளவுக்கு இந்த நாட்டு மண்ணுக்கு உரிய மக்களுடைய உரிமையை