பக்கம்:திராவிட இயக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


________________

47 அல்லாதார் இத்தேர்தலில் கலந்துகொள்ள விரும்பவில்லை. போட்டியிட நேர்ந்தால் ஆங்கிலேய உறுப்பினர் ஆதரவு கொண்டே வெற்றி பெறமுடியும். 1914ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் குஞ்சிராமன் நாயர் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில் இது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் 452 பேர் பிராமணர்கள். 124 பேர் பிராமணர் அல்லாத இந்துக்கள். பிறஇனத்தவர் 74 பேர். இப்பொழுது தேர்தல் நடைபெற்றால் யாராவது' ஒரு பிராமணர்தான் வருவார். 1914இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிராமணர்களே பெரும்பான்மையாக இருந்தமையால், எத்துணைத் தகுதி பெற்றவராயிருப்பினும், பிராமணர் அல்லாதார் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. அறிவுத்துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில் தேர்வுகளில் தேறுவதற்குத் தனித் திறமை வேண்டும் என்பதை மறுக்கவில்லை. எங்களால் புரிந்து கொள்ள, முடியாதது என்னவெனில், சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் ஆங்கிலம் படித்து அரசாங்க அலுவல்களில் உயர்ந்ததுடன் எல்லாத் தகுதிகளையும் ஏகபோகமாகத் தங்கள் உரிமையாகக் கொண்டு, பெரும்பான்மை வகுப்பினருள் படித்த ஒரு சிலருக்குங்கூட இடம் கொடுக்காமல் இருந்து வருவதேயாகும். ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியவில்லை. மற்றவர்களும் எல்லாத் தகுதியும், பண்பாடும் பெற்றிருந்தும், அப்படிப்பட்ட மற்ற மக்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. எத்துணை இடையூறுகள் இருந்தும், நீதித்துறையில், கல்வித்துறையில், வழக்கறிஞர் தொழிலில், மருத்துவம், பொறியியல் முதலான துறைகளில், பெரிய